தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பலூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தவெக தலைவர் விஜய், தற்போது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து அங்கு நடைபெறும் இடைத்தேர்தலில், நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தைத் தவெக சார்பில் வேட்பாளராகக் களமிறக்க அக்கட்சித் தலைமை ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், லால்குடி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த கு.ப.கிருஷ்ணனும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய்யின் இந்தத் திடீர் முடிவு மற்றும் சகாயத்தின் அரசியல் வருகை குறித்த பேச்சுக்கள் திருச்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தமிழக அரசியலில் மீண்டும் ஒரு முக்கியத் திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

