Dailyhunt
யாரு சாமி நீ..? செருப்புக்குள் செக் வைத்த கணவன். கள்ளக்காதலனுடன் ஊர் சுற்றிய மனைவி. கடைசியில் காத்திருந்த பயங்கர டுவிஸ்ட் ..!!

யாரு சாமி நீ..? செருப்புக்குள் செக் வைத்த கணவன். கள்ளக்காதலனுடன் ஊர் சுற்றிய மனைவி. கடைசியில் காத்திருந்த பயங்கர டுவிஸ்ட் ..!!

Tamizhan media 1 week ago

பீகார் மாநிலம் பாட்னாவில், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் ஒருவர், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவரைக் கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னாவின் புல்வாரி ஷெரீப் பகுதியைச் சேர்ந்த அந்த நபர், தனது மனைவி அடிக்கடி வெளியே செல்வதைக் கவனித்து அவர் மீது சந்தேகமடைந்துள்ளார். இதனை உறுதிப்படுத்த, யாருக்கும் தெரியாமல் தனது மனைவியின் செருப்புக்குள் சிறிய அளவிலான ஜிபிஎஸ் (GPS) கருவியைப் பொருத்தியுள்ளார்.

சம்பவத்தன்று கணவர் வேலைக்குச் சென்ற பிறகு, அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தனது மொபைல் போன் மூலம் மனைவியின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்த கணவர், ஜிபிஎஸ் காட்டிய இடத்திற்குத் திடீரெனச் சென்றுள்ளார். அங்கு தனது மனைவி வேறொரு நபருடன் (காதலன்) இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த மோதல் தெருவில் பெரிய சத்தமாக மாறியதால், அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புல்வாரி ஷெரீப் போலீஸார், கணவர், மனைவி மற்றும் அந்தப் பெண்ணின் காதலன் ஆகிய மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு நீண்ட நேரமாக ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளைக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில், இந்த விவகாரத்தில் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என மூவரும் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தைத் தொடர்ந்து, போலீஸார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த “ஹை-வோல்டேஜ்” டிராமா பாட்னாவில் பேசுபொருளாகியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media