Dailyhunt
"யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்!. இணையத்தில் கசிந்த 'ஜனநாயகன்'. திருட்டுத் தளத்திற்கு நன்றி சொல்லும் ரசிகர்கள். மாஸ் காட்டும் தளபதி கோட்டை.!!!

"யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்!. இணையத்தில் கசிந்த 'ஜனநாயகன்'. திருட்டுத் தளத்திற்கு நன்றி சொல்லும் ரசிகர்கள். மாஸ் காட்டும் தளபதி கோட்டை.!!!

Tamizhan media 3 weeks ago

விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படம், அரசியல் காரணங்களாலும் சென்சார் சிக்கல்களாலும் கடந்த நான்கு மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது.

ஜனவரி 9-ஆம் தேதியே வெளியாக வேண்டிய இப்படம், நீதிமன்ற வழக்கு மற்றும் ரிவைசிங் கமிட்டியின் ஆய்வுகளுக்குப் பிறகு தற்போது இணையத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் முக்கிய காட்சிகள் மட்டுமன்றி முழுப் படமும் கசிந்ததாகக் கூறப்படுவது திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

படம் லீக் ஆன தகவலால் கொந்தளித்த விஜய் ரசிகர்கள், யாரும் அந்த வீடியோக்களைப் பார்க்க வேண்டாம் என்றும் திரையரங்குகளில் மட்டுமே பார்ப்போம் என்றும் சமூக வலைத்தளங்களில் பரப்புரை செய்து வருகின்றனர். தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் லீக் ஆன லிங்குகளை நீக்கத் தீவிரமாகப் போராடி வரும் நிலையில், ரசிகர்களின் இந்த ஆதரவு படக்குழுவினருக்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது.

இந்த விவகாரத்தில் யாரும் எதிர்பாராத திருப்பமாக, வழக்கமாகப் படங்களைத் திருட்டுத்தனமாக வெளியிடும் ‘தமிழ்எம்வி’ தளம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், விஜய்யைச் சுற்றி நடக்கும் அரசியல் சூழலைத் தாங்கள் அறிவதாகவும், தங்கள் கொள்கைப்படி படம் அதிகாரப்பூர்வமாகத் திரையரங்குகளில் வெளியான பிறகே பதிவேற்றம் செய்வோம் என்றும் கூறியுள்ளனர். ஒரு திருட்டு இணையதளமே இத்தகைய முடிவை எடுத்திருப்பது இணையவாசிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, விஜய் ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media