Dailyhunt
அம்பலப்பட்டாரா விஜய்? - ஆதரவாளர்கள் அதிர்ச்சி

அம்பலப்பட்டாரா விஜய்? - ஆதரவாளர்கள் அதிர்ச்சி

Thamizh Valai 3 weeks ago

ரியலூர் மாவட்டம் குமுளூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் அனிதா. அவர்,பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1167 மதிப்பெண் பெற்றதுடன் மருத்துவப் படிப்பு படிக்க ஆசைப்பட்டார்.

அதற்காக 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வை எழுதிய மாணவி அனிதா தோல்வியடைந்தார். இதனால் மருத்துவராக வேண்டும் என்ற கனவு சிதைந்து போனதால் அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

அதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் அனிதாவின் வீட்டுக்குச் சென்று அவரது தந்தை ஆறுமுகத்திடம் ஆறுதல் கூறிச்சென்றனர்.அப்போது, நடிகர் விஜய்யும் அனிதாவின் வீட்டுக்குச் சென்று அவரது தந்தைக்கு ஆறுதல் கூறியதுடன் ரூ.10 இலட்சம் உதவித்தொகை வழங்கினார். மேலும் நீட் தேர்வுக்கு விஜய் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் தவெகவை துவங்கிய விஜய், சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் கடந்த 30 ஆம்தேதி விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் செயல்படும் கோகிலாம்பாள் அறக்கட்டளைக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்குவதற்காக ரூ.20 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாக விஜய் குறிப்பிட்டிருந்தார்.

நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு அரசு அனுப்பியும் இதுவரை பதில் சொல்லாமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். ஆனால்,அதைப்பற்றி இதுவரை கேள்வி கேட்காமல் விஜய் இருப்பதும்,நீட் பயிற்சி மையத்துக்கு ரூ.20 கோடி கொடுத்திருப்பதும் மக்கள் மனதில் பல ஐயங்களை எழுப்பியுள்ளது.

அனிதா மரணத்துக்கும் அந்தப் பயிற்சி மையத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? அதை மறைக்கத்தான் விஜய் அனிதா வீட்டுக்குச் சென்று உதவித்தொகை வழங்கினாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.இது விஜய்யின் தீவிர ஆதரவாளர்களையே கடும் அதிர்ச்சியடைய வைத்திருக்கும் கேள்விகளாக உலாவந்து கொண்டிருக்கின்றன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Thamizhvalai