Dailyhunt
பிரான்சில் பாசறைப்பாணருக்கு நினைவு வணக்கம் - விவரம்

பிரான்சில் பாசறைப்பாணருக்கு நினைவு வணக்கம் - விவரம்

Thamizh Valai 2 weeks ago

பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா ஏப்ரல் 28 அன்று அதிகாலை மறைவுற்றார்.அவருக்கு தமிழீழம் மற்றும் உலகெங்கும் நினைவு வணக்க நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அவற்றில் ஒன்றாக, தமிழர் ஒருங்கிணைப்பு குழு - பிரான்சு தமிழர் கலைப்பண்பாட்டு கழகம் பிரான்சசின் ஏற்பாட்டில் மாமனிதர் பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு 03.05.2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு பிரான்சு திரான்சிப் பகுதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பொதுச் சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு துணைப் பொறுப்பாளர் செல்வி நிதுஷா அவர்கள் ஏற்றிவைக்க மாமனிதர் செல்லப்பா அவர்களின் திருவுருவப்படத்திற்கான ஈகைச் சுடரை மாமனிதர் செல்லப்பா அவர்களின் பேர்த்தியார் குயில்மொழி ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தினார்.

மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச் சுடரினை- 21.04.2001 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2 ஆம் லெப்.ஆதவன் அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

மாமனிதர் செல்லப்பா அவர்களின் நினைவான அனைத்துலகத் தொடர்பக அறிக்கையை - தமிழர் ஒருங்கிணைப்பபுக் குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் வாசித்தளித்தார்.

மாமனிதர் செல்லப்பா அவர்களின் நினைவான தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சின் அறிக்கையை - தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரான்சின் முக்கிய செயற்பாட்டாளர் திரு.செவ்வேள் அவர்கள் வாசித்தளித்தார்

மாமனிதர் செல்லப்பா அவர்களின் நினைவான கவிதையை திரு.ஜெகநாதன்,தமிழ்ப் பெண்கள் அமைப்புச் செயலாளர் திருவாட்டி.யசோ ஆகியோர் வாசித்தனர்.

மாமனிதர் செல்லப்பா அவர்களின் நினைவான பேச்சு,பாடல் என்பனவும் இடம்பெற்றிருந்தன.மாமனிதர் பற்றிய நினைவுரையை - தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரான்சின் நிர்வாகப்பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் ஆற்றினார்.அவர் தனது உரையில் மாமனிதர் செல்லப்பா அவர்களின் நினைவான தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும், தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடனும் நிகழ்வு நிறைவு கண்டது.

நன்றி - எரிமலை

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Thamizhvalai