Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இரண்டகம் செய்தவர்கள் வாக்குக் கேட்கலாமா? - சீமான் கேள்வி

இரண்டகம் செய்தவர்கள் வாக்குக் கேட்கலாமா? - சீமான் கேள்வி

Thamizh Valai 1 day ago

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கார்த்திகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அலங்கியம் ரோடு, பெரியகாளி அம்மன் கோயில் அருகே வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது….

ஒரு கட்சியில் நின்று போட்டியிட்டு வென்று அந்த கட்சியில் இருந்து விலகி திருப்பி அதே பதவிக்கு வேறொரு கட்சியில் சேர்ந்து போட்டியிடுவது என்பது அது எப்படிப்பட்ட செயல்? சீட்டு கொடுத்து வேலை செய்து வெற்றி பெற வைத்த கட்சிக்கே உண்மையாக இல்லாத இவர்கள் எப்படி நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மையாக இருப்பார்கள்?. சேவை செய்வார்கள்? எவ்வளவு செலவு?எவ்வளவு பெரிய நேர விரயம்?

ஆளுங்கட்சியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தால்தான் மக்களுக்காகச் சேவை செய்யமுடியும் என்றால் அப்ப எதிர்க்கட்சி என்று ஒன்னு இருக்கக்கூடாதா? நாட்டில இது எந்த மாதிரியான ஜனநாயகம்.எதை நமக்குக் கற்பிக்க விரும்புகிறார்கள்.ஒரு அவையிலே எதிர்கருத்தே இருக்கக்கூடாது என்றால் அது ஜனநாயகமா? சர்வாதிகாரமா? அல்லது கொடுங்கோன்மையா? ஒற்றை கட்சி ஆட்சி முறையை நிறுவ நினைக்கிறார்களா? அதிபர் தேர்தலை கொண்டுவர அதிபர்முறையைக் கொண்டுவர விரும்புகிறார்களா? எதிர்கருத்தே இருக்கக்கூடாது,எதிர்க்கட்சியே இருக்கக்கூடாது.யாரும் பேசக்கூடாது.ஒரே ஒரு கட்சி,ஆளுங்கட்சியில் இருந்தால்தான் சேவை செய்யமுடியும் என்றால் திமுக உறுப்பினர்களுக்கு எல்லாம் தொகுதி நிதி கொடுக்கமாட்டார்களா? அவர்களுக்கு மக்கள் பணி செய்வதற்கு வாய்ப்பு வராதா? தவெக பதவிப்பசிக்கு இந்தத் தேர்தலை நம் மீது திணித்திருக்கிறார்கள்.அதுதான் எதார்த்தம்.

இந்த நாடகத்தை எல்லாம் நாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கு.மேடையில ஒரு அழைப்பு வருது.வந்து சொல்றாங்க,அழுது நடிக்கிறார்கள்.தவெக ஆட்சி அமைத்து 6 மாதம் ஆகிறது.தவெக ஆட்சி அமைச்சு ஆட்சிக்கு வரும்போது அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நீங்கள் பார்க்கவேண்டும்.எல்லா அறிவிப்புகளுமே தவெகவின் ஒரு ஏமாற்று,வெற்று அறிவிப்புகளாவே உள்ளது.

தமிழகம் 10 இலட்சம் கோடி கடனில் உள்ளதாகக் கூறுகிறார்.எப்படி இந்தத் திட்டங்களை தவெக அரசு நிறைவேற்ற முடியும்.

இந்த நாடு நாசமானதே இலவசத்துனாலதான்.அரசுக்கு வருவாய் கொடுக்கும் துறை போக்குவரத்துத்துறைதான். அதனை எதற்காக இலவசமாக கொடுக்கவேண்டும்.இந்தநேரத்தில எதையாவது அறிவிச்சு வாக்கு வாங்கி பதவிக்கு வந்துவிடனும்னு நினைச்சா அது கஷ்டம்.தவெக ஆட்சியில் மின்சாரமே கிடையாது.கரண்ட் இருந்தால்தானே இலவச மின்சாரம் கொடுக்கமுடியும்.200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று தவெக அறிவித்த உடனே மின்வெட்டு ஏற்பட்டுவிட்டது.மின்கட்டணமும் அதிகரித்துவிட்டது.தடையில்லாமல் மின்சாரம் கொடுக்க தவெகவில் எந்தத் திட்டமும் கிடையாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Thamizhvalai