லடாக்கில் சீனப் படைகள் 1959 ஆம் ஆண்டு நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ஒன்றிய ரிசர்வ் காவல்படையின் 10 வீரர்கள் மற்றும் தமிழக காவல்துறையில் பணியின்போது உயிரிழந்த காவலர்களின் தியாகத்தைப் போற்றி ஆண்டுதோறும் அக்டோபர் 21 ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி,தமிழ்நாடு காவல்துறை தலைவர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், காவலர் நினைவுச்சின்னம் முன்பு முதல்வர் விஜய் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.பின்னர் மரக்கன்றையும் நட்டு வைத்தார்.முன்னதாக,டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்,முப்படை அதிகாரிகள்,ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் அணிந்திருந்த சீருடையில்,ஆங்கில்ம்,இந்தி ஆகிய இருமொழிகளில் பெயர்ப்பட்டை (பேட்ஜ்) அணிந்திருந்தினர்.இது தமிழ்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்….
தமிழும் ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை.தவெக ஆட்சியில் அது "இந்தியும் ஆங்கிலமும்" என்ற இருமொழிக் கொள்கையாக மாறிவிட்டதா?காவல்துறை கொடிநாளில்,இந்தியும் ஆங்கிலமும் மட்டும் இடம்பெற்றுள்ள Badge-ஐ தமிழ்நாடு காவலர்கள் சீருடையில் அணியவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவது ஏன்?
தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா?
காவல்துறை என்பது மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட துறை என்பதை,அந்தத் துறையைத் தனது நேரடிப் பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சர் அறிவாரா?அல்லது மாநிலத்தின் மொழி உரிமையோடு சேர்த்து, காவல்துறை மீதான தனது அரசியல் பொறுப்பையும் ஒன்றியஅரசிடம் ஒப்படைத்து சரணடைந்துவிட்டாரா?
தமிழ்நாட்டில் தமிழ் கேட்பது கூட இன்று ஒரு கேள்வியாக வேண்டிய நிலை வந்திருப்பதே வேதனை.
குறிப்பு: பல ஆண்டுகளாக ஒன்றிய அரசு அழுத்தத்தைக் கொடுத்த நிலையில் திராவிட மாடல் அரசு ஒருபோதும் அதை ஏற்காமல் இருந்தது.இன்றைய அரசுக்கு முதுகெலும்பு ஏது?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

