Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நேகா போரா விடுவிக்கப்பட்டார் - நிம்மதிப் பெருமூச்சு

நேகா போரா விடுவிக்கப்பட்டார் - நிம்மதிப் பெருமூச்சு

Thamizh Valai 5 days ago

வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப்​பணி (எஸ்ஐஆர்) நட​வடிக்​கை​யில் முறைகேடுகள் நடை​பெறு​வ​தாக புகார் எழுந்​தது.இதையடுத்து,தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி வில​கக்​கோரி,கரப்​பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்​பில், டெல்​லியில் போராட்​டம் அறி​விக்​கப்​பட்​டது.

ஆனால்,போராட்​டத்​துக்கு அனுமதி மறுத்த டெல்லி காவல்துறை ஜந்​தர் மந்​தர் பகுதியை போராட்​டம்
நடத்​து​வதற்​கான களப்பட்​டியலில் இருந்து நீக்கி உத்​தர​விட்​டது.இந்தத் தடையை மீறி சிஜேபியின் முக்கிய நிர்​வாகி​களான சவுரவ் தாஸ்,அசுதோஷ் ரங்கா,அஜிங்​கியா ஷிண்டே ஆகியோர் ஜந்​தர் மந்​தர் பகுதி​யைச் சுற்றி
அமைக்​கப்​பட்​டிருந்த பாது​காப்பு அரண்​களைத் தாண்டி உள்ளே நுழைய முற்​பட்​டனர்.

கையில் தேசி​யக்கொடியுடன் ஜந்​தர் மந்​தரில் நுழைந்த அவர்​களை டெல்லி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதைக் கண்டித்து டெல்லி கன்னாட்பிளேஸ், சென்ட்ரல் பார்க் பகுதியில் தேசியக் கொடியை ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என்று அபிஜித் தீப்கே அழைப்பு விடுத்திருந்தார்.

இந்தப் போராட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் நேற்று,இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தான் தங்கியிருந்த ஜாண்டேவாலன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அபிஜித் கிளம்பினார். அவரை தடுத்து நிறுத்திய டெல்லி காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

அதேபோல் மூவர்ணக் கொடி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அகில இந்திய மாணவர் சங்கத்தினர்(ஏஐஎஸ்ஏ) நேகா போரா தலைமையில் மண்டி அவுஸ் அருகில் இருந்து ஊர்வலமாகச் சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த இரு இடங்களிலும் 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தீப்கே, நேகா போரா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட போதிலும் போராட்டம் அறிவிக்கப்பட்ட இடத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டனர். அவர்கள் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ராஜினாமா செய்யவேண்டும் என்றும் அவரை கைது செய்ய வலியுறுத்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

டெல்லியில் கைது செய்யப்பட்ட நேகா போரா அடையாளம் தெரியாத இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவரது உதவியாளர் குற்றம் சாட்டினார். நேகா போரா தனியாகக் கைது செய்யப்பட்டு, அடையாளம் தெரியாத இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரிடம் கைபேசியும் இல்லை. மீண்டும் ஒரு கடத்தல்? என்று அவரது சமூகவலைதளக் கணக்கில் பதிவிடப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில்,,,

அபிஜீத் தீப்கே எங்கே? நேகா போரா எங்கே? அவர்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பதைக் கூடத் தெரிவிக்காமல் கைது செய்து வைத்திருப்பது அப்பட்டமான சட்டவிரோத செயலும்,மனிதநேயத்துக்கு எதிரானதும் ஆகும்.ஒன்றிய அரசு அவர்கள் இருவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதை நிறுத்தவேண்டும்.போராட்டத்தை ஒடுக்க நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அதனை மேலும் வலுப்படுத்தவே செய்யும்.தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவிநீக்கம் செய்வதைத் தவிர ஒன்றிய பாஜக அரசுக்கு வேறு வழியில்லை.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில்,இன்று காலை 7 ம்ணியளவில் நேகா போரா வெளியிட்டுள்ள பதிவில்…

நான் விடுவிக்கப்பட்டுவிட்டேன்.
தடுப்பில் வைக்கப்பட்டுள்ள அனைத்துப் போராட்டக்காரர்களையும் விடுவியுங்கள்.
ஜனநாயகத்திற்காகவும் அரசியலமைப்புச் சட்டத்திற்காகவும் போராடுவதைக் குற்றச்செயலாக மாற்றமுடியாது என்று கூறியுள்ளார்.

இதனால்,சமுதாய ஆர்வலர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.

அதேசமயம்,அபிஜித் தீப்கே இன்னும் விடுவிக்கப்படவில்லை.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Thamizhvalai