Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சசிகலா கட்சியின் 21 வேட்பாளர்கள் - விவரம்

சசிகலா கட்சியின் 21 வேட்பாளர்கள் - விவரம்

Thamizh Valai 2 months ago

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி,அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதியகட்சியை சசிகலா தொடங்கியுள்ளார்.

இந்தத் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்தார். தனது ஆதரவாளர்களுடன் தொடர் ஆலோசனை நடத்தி வந்த அவர், பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசுவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

இதற்கிடையில் மார்ச் 18 முதல் 23 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் விருப்பமனுக்கள் பெறப்படும் என அறிவித்திருந்தார். விருப்பமனு மற்றும் நேர்காணல்களைத் தொடர்ந்து 21 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை சசிகலா வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம்:

1.சங்கரன்கோவில் - வசந்தி முருகன்,2.மதுரை மத்திய தொகுதி - ப.சக்கரவர்த்தி,3.திருப்பரங்குன்றம் - த.தனபாண்டியன்,4.திருமங்கலம் - ப.ஜீவிதா நாச்சியார்,5.மேலூர் - பா.சோனியாகாந்தி,6.மானாமதுரை - க.திலக்ராஜ்,7.பரமக்குடி - அமிர்தா பாலுசாமி,8.இராஜபாளையம் - அ.அரிஷ்,9.முதுகுளத்தூர் - இராம்குமார் பாண்டியன்,10.தென்காசி - மு.பூசத்துரை,11.சிவகங்கை - பிரபு,12.குளச்சல் - எஸ்.கிறைஸ்ட் மில்லர், 13.சிவகாசி - நேஷனல் மு.கணேசன்,14. திண்டுக்கல் - பி.இராமுத்தேவர்,15.மயிலாடுதுறை - நா.சுதாகர்,16.மன்னார்குடி - சு.இராசுப்பிள்ளை,17.ஸ்ரீரங்கம் - அ.விஜய்,18.திட்டக்குடி - இரா.பழனிவேல்,19.ஸ்ரீபெரும்புதூர் - புருசோத்தமன், 20.திருச்சி கிழக்கு - செ.நந்தகுமார்,21.நாங்குநேரி - சந்தனக்கடத்தல் வீரப்பன், அயோத்திக்குப்பம் வீரமணி என்கவுன்டரில் முக்கியபங்கு வகித்த, முன்னாள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ச.வெள்ளத்துரை

ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அதோடு,இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பசும்பொன் மக்கள் தேசம் கட்சிக்கு சாத்தூர், ஆலங்குளம் ஆகிய தொகுதிகளும், வெள்ளாளர் முன்னேற்றக் கழக நிறுவனர் அண்ணா சரவணனுக்கு நன்னிலம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Thamizhvalai