வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சசிகலா தலைமையிலான அஇபுதமமுக கட்சியும் மருத்துவர் இராமதாசு தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி உட்பட சில கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.
சசிகலா தன் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துவருகிறார்.ஏற்கெனவே இரண்டுகட்டங்களாக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டிருக்கும் மூன்றாம்கட்ட வேட்பாளர் பட்டியல்…
1.பேராவூரணி - ரா.ரவி,2.ஒட்டப்பிடாரம் (தனி) - திருமதி எச்.அமுதா,3.அருப்புக்கோட்டை - பா.தர்மராஜ்,
4.பரமத்தி வேலூர் - கே.ஆர்.விஜய்சூர்யபாலாஜி,5.பல்லாவரம் - ரா.ராஜ்குமார்,6.பொள்ளாச்சி - மெய்குரு (எ) முருகவேல்,7.திருவிக நகர் (தனி) -சி.கிறிஸ்டி,8.கோவை வடக்கு - கே.ராகுல்காந்தி,9.திருச்செந்தூர் - பி.கோபாலகிருஷ்ணன்
இவ்வாறு அறிவித்துள்ளார்.
அதோடு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இரண்டு வேட்பாளர்களை மாற்றியிருக்கிறார்.
விளாத்திகுளம் தொகுதியில் திருமதி சிவ சுஜா விஜயலட்சுமிக்குப் பதிலாக கே.பொன்பாண்டியும் உளுந்தூர்பேட்டை தொகுதியில் அறிவிக்கப்பட்ட ஜெ.குமாருக்குப் பதிலாக இரா.உதயகுமார் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுமட்டுமின்றி, மருத்துவர் இராமதாசுவின் பாமக கட்சி போட்டியிடுவதால் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, வாணியம்பாடி மற்றும் அரக்கோணம் ஆகிய தொகுதிகளில் தங்கள் கட்சி போட்டியிடாது என்றும் அறிவித்துள்ளார்.
சசிகலா கட்சி சார்பாக, அரக்கோணம் (தனி) தொகுதிக்கு தி.முரளிதரன்,வாணியம்பாடி தொகுதிக்கு தெ.கணேசன் என்பவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.அவர்கள் இருவரும் இப்போது திரும்பப் பெறப்பட்டுள்ளனர்.

