Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சி.வி.சண்முகம் நிலை என்ன?

சி.வி.சண்முகம் நிலை என்ன?

Thamizh Valai 2 weeks ago

மிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக 47 இடங்​களில் மட்​டுமே வென்று மூன்​றாம் இடத்​துக்குத் தள்​ளப்​பட்​டது.அதைத்​தொடர்ந்து பொதுச்செய​லா​ளர் எடப்பாடி பழனிச்​சாமி​யுடன் கருத்​து​வேறு​பாடு ஏற்​பட்டு சி.​வி.சண்​முகம் தலை​மை​யில் 25 சமஉக்​கள் தனி அணி​யாகச் செயல்​பட்​டனர்.மேலும்,தவெக அரசின் நம்​பிக்கை கோரும் தீர்​மானத்​துக்கு ஆதர​வாக​வும் வாக்​களித்​தனர்.

ஆனால்,அவர்கள் எதிர்பார்த்த மாதிரி அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.இதனால் சி.வி.சண்முகம் அணி கலகலத்துப்போனது.

அதோடு, சி.​வி.சண்​முகம் அணியிலிருந்த எஸ்​.பி.வேலுமணி, சி.​விஜய​பாஸ்​கர், கே.பி.அன்​பழகன் உள்​ளிட்​டோர் எடப்பாடி பழனிச்​சாமியை சென்னை பசுமைவழிச் சாலை​யில் நேற்று சந்​தித்து சமா​தானப் பேச்​சு​வார்த்தை
நடத்​தினர்.இதில் உடன்​பாடு எட்​டப்​பட்ட நிலை​யில்,இரு அணி​யினரும் தலை​மைச் செயல​கம் புறப்​பட்​டுச்
சென்​றனர்.அங்கு இரு அணி​கள் சார்​பிலும்,தகுதி நீக்க நடவடிக்கை கோரி பேர​வைத் தலை​வரிடம் ஏற்​கெனவே அளித்த கடிதத்தை திரும்​பப் பெறு​வ​தாக கடிதம் அளித்​தனர்.

மேலும்,அதி​முக​வின் சட்​டப்​பேரவைக் கட்​சித் தலை​வ​ராக எடப்பாடி பழனி​ச்சாமி,கொற​டா​வாக அக்ரி கிருஷ்ண​மூர்த்தி ஆகியோரைத் தேர்ந்​தெடுத்​திருப்​ப​தாக​வும் பேர​வைத் தலை​வரிடம் கடிதம் அளித்​தனர்.

இந்த நிகழ்வில்,சி.​வி.சண்​முகம் உடன் வரவில்​லை.அவர் அதிருப்​தி​யில் இருப்​ப​தாகத் தெரி​கிறது.அவருடன் மூத்த நிர்​வாகி​கள் மேற்​கொண்ட சமரச​மும் தோல்​வி​யில் முடிந்​த​தாகக் கூறப்​படு​கிறது.

அதேநேரம், பேர​வைத் தலை​வரைச் சந்​தித்​த​பின்,செய்​தி​யாளர்​களிடம் எஸ்​.பி.வேலுமணி கூறியதாவது….

அதி​முக தோல்வி அடைந்த பிறகு,சில கருத்​துகளை நாங்​கள் எடப்பாடி பழனி​ச்சாமி​யிடம் சொன்​னோம்.
ஆளுங்​கட்​சிக்கு ஆதர​வான நிலை எடுத்​தோம்.அதனால் 25 பேரை தகுதிநீக்​கம் செய்ய எடப்பாடி பழனிச்​சாமி
தரப்​பில் பேர​வைத் தலை​வரிடம் மனு கொடுக்​கப்​பட்​டது.நாங்​களும் 22 பேரை தகுதிநீக்​கம் செய்ய மனு
கொடுத்​திருந்​தோம்.

இந்த இரு மனுக்​களை​யும் நாங்​கள் திரும்பப் பெற்றுவிட்​டோம்.கட்​சி​யில் பிளவு ஏற்​பட​வில்​லை.எங்​களுக்​குள் கருத்து வேறு​பாடுதான் நில​வியது.இப்​போதும்,எப்​போதும் எங்​கள் பொதுச்செய​லா​ளர் எடப்பாடி பழனிச்​சாமி​தான். சி.​வி.சண்​முக​மும் கடிதத்​தில் கையெழுத்​திட்​டிருக்​கிறார். அவரும் எங்​களு​டன் உள்​ளார்.

கட்​சி​யின் தொடர் தோல்வி குறித்​து,பொதுக்​குழுவைக் கூட்டி விவா​திக்க வேண்​டும்,உயர்​மட்டக்குழு அமைத்து ஆராயவேண்​டும் என்று கோரிக்கை வைத்​தோம்.அதை பொதுச்​செய​லா​ளர் எடப்பாடி பழனிச்​சாமி ஏற்​றுக்​கொண்​டார். தமிழகத்​தில் 31 ஆண்டு காலம் ஆட்​சி​யில் இருந்த கட்சி அதி​முக.நாங்​கள் பதவி கேட்டு தவெக​விடம்
செல்​ல​வில்​லை.இனி ஒற்​றுமை​யாக இருந்து அதி​முக வெற்​றிக்​காகப் பாடு​படு​வோம்

இவ்​வாறு அவர் கூறி​னார்.

இவர் சி.வி.சண்முகம் எங்களுடன்தான் இருக்கிறார் என்று எஸ்.பி.வேலுமணி சொன்னாலும் அவர் எடப்பாடியைச் சந்திக்கச் செல்லவில்லை.

ஏனென்பதற்கு புதிய காரணம் சொல்லப்படுகிறது.அது என்னவெனில்?

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியம்,வளவனூர் பேரூர் அதிமுக செயற்குழுக் கூட்டம் ஒன்றியச் செயலாளர் பேட்டைமுருகன் தலைமையில் நேற்று நடந்தது.இதில் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்ற
எடப்பாடி பழனிச்சாமி அணியைச் சேர்ந்த புதிய மாவட்டச் செயலாளரான பசுபதி உரையாற்றினார்.

அவர் பேசுகையில்….

அதிமுகவில் பதவிக்கு ஆசைபட்ட துரோகிகள் எல்லாம் கட்சியின் தோற்றத்தை மாற்றிக்காட்ட நினைக்கிறார்கள். புதுசா கட்சிக்கு நான் வரவில்லை.1996 இல் ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு நான் பாமக மாவட்டச் செயலாளர். அப்போது சி.வி.சண்முகம்,எந்த பங்க் கடையில் கவுந்து படுத்திருந்தார் என்று தெரியாது.
அப்போதெல்லாம் அவர் ஒரு ஆளேயில்லை.அதன்பிறகு விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் 20 ஆண்டு கால மன்னர் ஆட்சி நடந்திருந்தது.அவர்கள் நினைத்தது,வச்சதுதான் சட்டம்.அவர்கள் மட்டும்தான் கருத்தைச் சொல்லமுடியும், பேசமுடியும் என்பது எடப்பாடி பழனிச்சாமியால் மாற்றப்பட்டிருக்கிறது.நாம் ஒரு இக்கட்டான சூழலில் இருப்பதைப்போல் மாயை ஏற்படுத்துகின்றனர் என்றார்.

அதைத் தொடர்ந்து வானூர் தொகுதி முன்னாள் சமஉ சக்கரபாணி பேசும்போது….

சி.வி.சண்முகம் கட்சிக்கு பெரிய துரோகத்தை செய்து நடுத்தெருவில் நிற்கிறார்.தற்போது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வாரா,அவரது பதவி பறிக்கப்படுமா என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.மீண்டும் கட்சியில் அவர் சேரமுடியாது.சி.வி.சண்முகத்தைத் தவிர மற்ற எல்லோரையும் சேர்த்துக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.அவரை கட்சியில் மீண்டும் சேர்த்தால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிமுக கிளைச்செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா கடிதம் கொடுத்து விடுவோம் என்று தலைமையிடம் கூறிவிட்டேன்.எனவே இனி நாம்தான் கட்சி.கட்சியை வலுப்படுத்த நாம் பணியாற்றவேண்டும். பணம் இருப்பவன்,இல்லாதவன் என்று இல்லாமல் உழைச்சவர்களுக்கு பதவி கிடைக்கும் என்றார்.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள இவர்களின் கடும் எதிர்ப்பு காரணமாகத்தான் சி.வி.சண்முகம் எடப்பாடி சந்திப்பு நேற்று நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.விழுப்புரம் மாவட்ட அதிமுகவினரை சமாதானப்படுத்திவிட்டு சி.வி.சண்முகட்தி எடப்பாடி சந்திப்பார் என்று சொல்லப்படுகிறது.

இன்னொருபக்கம் அவரை தவெக பக்கம் இழுக்கும் வேலைகளும் நடந்துகொண்டிருக்கின்றன என்று சொல்கிறார்கள்.

இரண்டில் எது நடக்கும்? என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும் என்று சொல்கின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Thamizhvalai