Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
திருப்பரங்குன்றம் - தமிழ்த்தேசிய இயக்க நிலைப்பாடு என்ன?

திருப்பரங்குன்றம் - தமிழ்த்தேசிய இயக்க நிலைப்பாடு என்ன?

Thamizh Valai 1 day ago

திருப்பரங்குன்றம் தீபம் சிக்கலில் தமிழ்த்தேசிய மற்றும் திராவிட இயக்கங்களின் நிலை என்ன? என்ற கேள்விக்கான விடை….

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றக்கூடாது என்று நாம் சொல்வதாக பார்ப்பனிய-பாசிச ஆற்றல்கள் தீவிரப் பரப்புரை செய்து வருகின்றன. நம்மை இந்துக்களின் பகைவர்கள் என்றும் அவர்கள் முத்திரையிடுகின்றார்கள்.இது உண்மையில்லை.

காலங்காலமாக ஒவ்வோராண்டும் எந்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கமோ அங்கேயே இந்த ஆண்டும் முருக பக்தர்களும் இறையன்பர்களும் மனமகிழும் வண்ணம் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு ஆவன செய்யுங்கள் என்கிறோம்.

இப்போது எழுந்திருக்கும் சிக்கல் வேறு.சிக்கந்தர் தர்க்கா அருகில் இருக்கும் அளவைக் கல்லாகிய ஒரு தூணைத் தீபத்தூண் என்று சொல்லி அதன்மேல் தீபம் ஏற்ற வேண்டும் என்று அடம் பிடிக்கும் கும்பலுக்குப் பணிந்து போவதா? என்பதுதான் சிக்கலாக எழுந்துள்ளது,வேண்டுமென்றே எழுப்பப்பட்டுள்ளது.

இந்தக் கும்பலின் மிகத் தீவிர ஆதரவாளர் உயர்நீதிமன்ற நீதிபதியாகவே உட்கார்ந்து மனுதர்மம் காத்து வருவது இச்சிக்கலை மேலும் சிக்கலாக்கி விட்டது.

உயர்நீதிமன்ற ஆணைகளுக்குத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகளே ஒருநாள் மட்டும் ஒருமுறை மட்டும் அந்தத்தடையை மீறி அரசு அதிகாரிகளைக் கொண்டே விளக்கேற்றச் சொல்வது விபரீதம் என்பதா? வேடிக்கை என்பதா? நச்சு விளையாட்டு என்பதா? திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதன் பெயரில் தமிழ்நாட்டில் பொதுஅமைதிக்கும் மக்கள் ஒற்றுமைக்கும் தீவைத்து விடாதீர் என்று எச்சரிக்கிறோம்!

சென்ற நவம்பர் 20ஆம் நாள் இந்திய உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் (அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி) திருப்பரங்குன்றம் தொடர்பாக வழங்கியுள்ள பொருந்தாத் தீர்ப்பைத் தமிழ்நாட்டில் அமைதியை விரும்பும் அனைவர் சார்பிலும் கண்டிக்கிறோம்!

திருப்பரங்குன்றம் உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றும் மரபு ஒரு நூற்றாண்டுக்கு மேல் பழமையானது. இதற்கு மாற்றாகவோ இத்துடன் கூடுதலாகவோ சிக்கந்தர் தர்கா அருகிலுள்ள அளவைக் கல்லில் தீபம் ஏற்றும் முயற்சியைக் கடந்த காலத்தில் அரசோ நீதிமன்றமோ ஏற்றதில்லை.

இந்தநிலையில்தான் சென்ற ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இந்து மக்கள் கட்சித் தலைவர் இராம ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் அளவைக் கல்லைத் தீபத் தூண் என்று சொல்லி,அதில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கினார். மேலும் இரு நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை உறுதி செய்தனர்.பொது ஒழுங்குக்குக் கேடு செய்யும் ஆபத்துக் கருதி மரபுக்கு மாறாக இப்படிச் செய்யவிடாமல் தமிழக அரசு தவிர்த்து விட்டது.மேற்கண்ட தீர்ப்புகளை எதிர்த்து மாநில அரசு உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டின் மீது உச்சநீதிமன்றம் இதுவரை தீர்ப்பு வழங்கவில்லை.2027 க்கு விசாரணையை ஒத்திவைத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இப்போதைக்கு ஒருமுறை மட்டும் அளவைக் கல்லில் தீபமேற்ற ஆணையிட்டுள்ளனர்.முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் பத்துப்பேர் மட்டும் மலைமேல் சென்று தீபம் ஏற்ற வேண்டுமாம்,பெருங்கூட்டம் சேர்க்கக் கூடாதாம்! இதற்கு மாநிலக் காவல்துறை பாதுகாப்புத் தராவிட்டால் மத்தியப் படை பாதுகாப்புத் தர வேண்டுமாம்!

அளவைக் கல்லா? தீபத் துணா? யார் சொல்வது சரி? அரசு ஆவணங்கள் என்ன சொல்கின்றன? வரலாறு என்ன சொல்கிறது? மரபை மீறி தர்க்கா அருகில் தீபம் ஏற்றுவதால் பதற்றம் ஏற்படாதா? பொது அமைதி கெடாதா? முறையாக அமைந்த மாநில அரசு இருக்கும் போது, மத்தியப் படைகளைத் துணைக்கு அழைப்பது ஏன்? இது அரசமைப்புக்கு உட்பட்டதுதானா?

இந்த வினாக்கள் எதற்கும் தெளிவான விடை காணாமல் ஒரு முறை,ஒரே ஒரு முறை மட்டும் பத்துப் பேர் மலையேறிப் போய் வழக்கமான கார்த்திகைத் தீபம் தவிர வேறு ஓரிடத்தில் விளக்குக் கொளுத்துவதன் நோக்கம் என்ன?

நடப்பது எதுவும் தற்செயலன்று என்பதற்கு ஒரு வலுவான சான்று… சென்ற ஆண்டு 2025 திசம்பர் 10ஆம் நாள் ஆர் எஸ் எஸ் சர்வாதிகாரி மோகன் பகவத் திருச்சிராப்பள்ளிக்கே வந்து "திருப்பரங்குன்றம் தீபச் சிக்கலில் இந்துக்கள் வெற்றி பெற வேண்டும்" என்று அறிவித்தது ஆகும்.

ஆர் எஸ் எஸ் பரிவார அமைப்புகள் இந்த விசித்திர விபரீதத் தீர்ப்பைக் கொண்டாடுவது பற்றிக் கவலையோடு சிந்திக்க வேண்டும்.அவர்கள் இந்த ஒரு முறையோடு ஓயப்போவதில்லை என்பது தெளிவு.அயோத்தியை மறக்க முடியாது.பால இராமர் வழிபாடு என்று தொடங்கியவர்கள் பாபர் மசூதியை இடிக்கும்வரை சென்றார்கள் அல்லவா? ஒரு பழைய நினைவுச் சின்னத்தை இடித்து ஓராயிரம் கல்லறைகள் கட்டுவதற்கு வழிகோலிய அந்த பயங்கரவாதம் இன்றும் நமக்கு எச்சரிக்கை!

திருப்பரங்குன்றத்தை அயோத்தி ஆக்குவோம் என்ற வெறிக் கூச்சலை எச்.ராஜா வகையறா தொடர்ந்து எழுப்பி வருவதைத் தமிழ்மக்கள் அலட்சியம் செய்து விடக் கூடாது.ஒரு முறை ஓரிடத்தில் ஏற்றும் தீயைக் கொண்டு ஊரையே கொளுத்தி,நாட்டையே எரித்துச் சாம்பலாக்கி விடுவார்கள் என்ற எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இவ்வாறு கூறுகிறார்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Thamizhvalai