Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விஜய்க்கு தமிழினப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்ச மகன் வாழ்த்து - தமிழ்மக்கள் அதிர்ச்சி

விஜய்க்கு தமிழினப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்ச மகன் வாழ்த்து - தமிழ்மக்கள் அதிர்ச்சி

Thamizh Valai 3 weeks ago

2026 தமிழ்நாடு சட்​டப்​பேரவைத் தேர்​தலில் நடிகர் விஜய் தலை​மையி​லான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்​றுள்​ளது.இதனால் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கிறார்.

இதற்காக,தமிழ்மக்களை இனப்படுகொலை செய்த சிங்கள வெறியன் மகிந்த ராஜபக்​சவின் மகனும், இலங்கை​ நாடாளுமன்ற உறுப்பினரு​மான நமல் ராஜபக்ச,விஜய்க்கு வாழ்த்​துச் செய்​தி கொடுத்திருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது….

தமிழ்நாடு சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்​ற ஜோசப் விஜய் சந்​திரசேகருக்கு வாழ்த்​துகள். மக்​களுக்​குத் தேவை​யான பயனுள்ள திட்​டங்​களைச் கொண்டு சேர்க்க உங்​களுக்​கும், உங்​களது குழு​வினருக்​கும்
மன வலிமை​யும்,துணிச்​சலும் கிடைக்க வாழ்த்​துகள்.
மேலும், இரு நாட்டு மக்​களை​யும் பாதிக்​கும் பல்​வேறு முக்​கிய விவ​காரங்​களில், இலங்​கை​யுடன் வலு​வான
மற்​றும் ஆக்​கப்​பூர்​வ​மான உறவை வளர்த்​தெடுக்க புதிய தலைமை வழி​வகுக்​கும் என நம்​புகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்​பிட்​டுள்​ளார்.

நடிகர் விஜய்க்கு இனப்படுகொலைக் குற்றவாளி நமல் ராஜபக்ச வாழ்த்துச் செய்தி அனுப்பியிருப்பது ஈழத்தமிழ் மக்களுக்கும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் பேரரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

நமலுக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு? விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தது எதனால்? தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்பவருக்கு மரியாதை நிமித்தமான வாழ்த்து என்றால், இதுபோல் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்ததில்லையே? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Thamizhvalai