Tuesday, 01 Dec, 1.20 pm Thandora Times

அரசியல்
பேச்சுவார்த்தை நடத்த அன்புமணி ராமதாசுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு

வன்னியர்களுடைய 40 ஆண்டுகள் கோரிக்கை இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி பல போராட்டங்கள் டாக்டர் ராமதாஸ் போராட்டம் நடத்தியிருக்கிறார். இதுவரை தமிழகத்தை ஆண்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கலைஞர் மற்றும் தற்போது ஆளும் எடப்பாடி பழனிச்சாமி வரை அனைத்து முதல்வர்களிடமும் வலியுறுத்தியிருக்கிறார். இருப்பினும், எங்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கவில்லை. எங்களது நோக்கம் பின்தங்கிய சமுதாயம் வளர வேண்டும் என்பதுதான். அதில் பெரும்பான்மையோர் இருப்பது வன்னியர் சமுதாயம். இப்போராட்டத்தைக் குறித்து கடந்த 22ந்தேதி நடந்த பொதுக்குழுவில் தெரிவித்திருந்தோம். அதன்படி இன்று அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த போராட்டத்தை 1 வாரத்திற்கு முன்பே அறிவித்திருந்தோம். இதுவரை அரசாங்கம் எங்களை அழைத்துப் பேசவில்லை. டிசம்பர் 1ம் தேதி முதல் அரசாங்கம் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை தொடர்ந்து ஆங்காங்கே போராட்டம் நடத்துவோம். என்று கூறியிருந்தார்.இந்நிலையில், பேச்சுவார்த்தை நடத்த அன்புமணி ராமதாசுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்திருக்கிறார். இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சந்திப்பு நடைபெற உள்ளது.
Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Thandora Times
Top