Wednesday, 02 Dec, 2.20 pm Thandora Times

அரசியல்
ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும்- தமிழருவி மணியன்

கொரோனா பரவல் காரணமாகவும், உடல் நலம் கருதியும் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சிகள் துவங்க மாட்டார் என சமூக வலைதளங்களில் அவரின் பெயரில் அறிக்கையானது வெளியானது. அந்த அறிக்கைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ரஜினிகாந்த் தெளிவுபடுத்தினார். ஆனால், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள் உண்மையானவை என்பதை அவரே ஒப்புக் கொண்டார்.இதனால் ரஜினி கட்சி துவக்க மாட்டாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்தது. இந்நிலையில் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவைகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் வெளியே வந்து தனது செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருகிறேனா இல்லையா என்பது குறித்து நானே அறிவிப்பேன் என்று தெரிவித்து விட்டார்.ரஜினிகாந்த் அவர்களை அரசியலுக்கு ஈர்க்கும் முயற்சியில் முதன்மையாக செயல்பட்டு வருபவர் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன். அவர் கடந்த நான்கு வருடங்களாக ரஜினிகாந்த் கட்சி துவங்க இருக்கிறார் என்று தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசி வருகிறார்.இந்நிலையில் அவரிடம் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து கேள்வி எழுப்பிய போது, அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிந்தியுங்கள் என்று தான் ரஜினிகாந்திடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Thandora Times
Top