Tuesday, 01 Dec, 5.20 pm Thandora Times

அரசியல்
சிவசேனாவில் இணைந்தார் நடிகை ஊர்மிளா மடோன்கர்

நடிகை ஊர்மிளா மடோன்கர் சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார். கடந்த ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ஊர்மிளா பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். பின்னர் காங்கிரஸ் தலைவர்கள் தனக்கு ஆதரவளிக்கவில்லை என்று கூறி கட்சியிலிருந்து விலகினார். இந்நிலையில், முதலமைச்சரும், சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே முன்னிலையில் ஊர்மிளா சிவசேனா கட்சியில் இணைந்தார். உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரே ஊர்மிளாவின் கையில் காவி கயிறு கட்டினார்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Thandora Times
Top