Wednesday, 02 Dec, 9.20 am Thandora Times

அரசியல்
'சூரப்பா அப்பழுக்கற்றவர்..' தமிழக அரசுக்கு ஆளுநர் கடிதம்?!

280 கோடி ரூபாய் முறைகேடு குற்றச்சாட்டு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது எழுப்பப்பட்டுள்ளது.இதுகுறித்து உரிய விசாரணை நடத்த விசாரணை அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இந்தநிலையில் சூரப்பா மீதான விசாரணையை நீதியரசர் கலையரசன் அண்மையில் துவக்கியுள்ளார். தற்போது விசாரணை தொடங்கியிருக்கும் நிலையில் தமிழக அரசுக்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 5 பக்க கடிதம் ஒன்றை எழுதி இருப்பதாகவும் அதில் சூரப்பா அப்பழுக்கற்றவர் என்றும் துணைவேந்தர் பொறுப்பை அவர் நேர்மையாகவும் திறம்படவும் செயலாற்றி வருவதாகவும் ஆளுநர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக உயர் கல்வித்துறை வட்டாரங்களில் இருந்து பெறப்படும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Thandora Times
Top