Wednesday, 02 Dec, 5.20 pm Thandora Times

அரசியல்
திமுகவில் பழம்பெரும் தலைவர்கள் கை கட்டி நிற்கிறார்கள்

உதயநிதி ஸ்டாலின்தான் சினிமாவில் நடித்துவிட்டு நேரிடையாக திமுகவிற்கு வந்து ஸ்டாலினின் தோளில் அமர்ந்தவர் திமுகவில் உள்ள பழம்பெரும் தலைவர்கள் எல்லாம் உதயநிதி ஸ்டாலினிடம் கையை கட்டி நிற்கின்றனர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அருப்புக்கோட்டையில் பேட்டிவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செந்நெல்குடியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்( ரூ.444.71 கோடி மதிப்பீட்டில்) சார்பில் , தாமிரபரணி ஆற்றினை நீராதாரமாக கொண்டு சாத்தூர், விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய நகராட்சி பகுதிகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தை பூமிபூஜை செய்து, திட்டப்பணிகளை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் அருப்புக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழக முதல்வர் படிப்படியாக உயர்ந்தவர் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்து கிளைச் செயலாளர் என படிப்படியாக உயர்ந்தவர் எடப்பாடி பழனிச்சாமி உதயநிதிதான் சினிமாவில் நடித்துவிட்டு நேரிடையாக திமுகவிற்கு வந்து ஸ்டாலின் தோளில் அமர்ந்தவர். திமுகவில் உள்ள பழம்பெரும் தலைவர்கள் எல்லாம் உதயநிதி ஸ்டாலினிடம் கையை கட்டி நிற்கின்றனர். அந்த நிலைமை அதிமுகவிற்கு வராது எனவும், ரஜினி அரசியல் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, ரஜினி முதலில் அரசியலுக்கு வரட்டும் அப்புறம் அதை பற்றி பேசலாம், தன்னை எதிர்த்து சிவகாசி தொகுதியில் யார் நின்றாலும் கவலை இல்லை, போட்டின்னு வந்த களத்தில் கம்பு சுற்றிதான் ஆகணும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தற்பொழுது தேர்தலில் நின்றாலும் போட்டியின்றி வெற்றி பெற முடியாது என விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டியளித்தார்.
Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Thandora Times
Top