Thursday, 29 Oct, 5.24 pm Thandora Times


உதயநிதியின் வாரிசு அரசியல் கனவிற்கு செக் வைத்தாரா பிரசாந்த் கிஷோர்?!

திமுக ஒன்றும் சங்கர மடம் அல்ல என்று அன்று வாரிசு அரசியலுக்காக கருணாநிதி சொன்னதை பிரசாந்த் கிஷோர் தற்போது கையில் எடுத்துள்ளாரோ என்ற சந்தேகம் பொதுமக்களிடையே வலுத்துள்ளது. நேரடியாகவே திமுக தலைவர் மு க ஸ்டாலின் பேசி அரசியல் வாரிசான உதயநிதி ஸ்டாலினின் நடவடிக்கைகளால் சீனியர்கள் பலர் அதிருப்தி காரணமாக வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஒரு செக் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக ஒன்றும் சங்கர மடம் இல்லை என்று சொன்ன அதே கருணாநிதி தான் தனக்குப்பின் வழிநடத்த போகிற தம்பி ஸ்டாலின் அவர்களே என்று தொண்டர்கள் முன்னிலையில் கூறி ஆரவாரத்தையும் ஆதரவாளர்களையும் ஸ்டாலினுக்கு பெற்று தந்தார். அதன்படி கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு முக ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றார். ஆரம்பத்தில் அவ்வளவாக விமர்சிக்க படாத நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலினும் திமுகவிற்கு வந்த பிறகு அரசியல் வாரிசு அரசியல் குறித்த விமர்சனங்கள் அதிகமாக எழுந்து வருகின்றன.திமுகவின் வாரிசு அரசியலை மையப்படுத்தி பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. இதனை அடுத்து தற்பொழுது இந்த விவகாரத்திற்கு கடிவாளம் போட்டு வருவதாக தற்போதைய செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. அதாவது, உதயநிதியின் நடவடிக்கைகளை பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் கவனித்து வருகிறது. காரணம் உதயநிதியின் பொறுப்பு, பதவி, தரப்படும் முக்கியத்துவம் எல்லாமே கட்சியின் சீனியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் உதயநிதி ஸ்டாலின் மீடியாக்களுக்கு பேட்டிகளை தந்து விடுவதாகவும் சொல்லப்படுகிறது. உதயநிதியால் தான் கு.க செல்வம் போன்ற முக்கிய நிர்வாகிகள் கட்சி மாறி விட்டனர் என்ற கருத்தும் காரணமாக உள்ளது.இதனால் கட்சியின் நிர்வாகிகள் தலைமையிடம் ஒரு விஷயத்தை சொல்வதை விட நேரடியாக பிரசாந்த் கிஷோரிடமே ஓப்பனாக பேசுகிறார்களாம். இதுபோன்ற சூழலில் இன்னொரு தகவலும் பிரசாந்த் கிஷோர் டீம் காதுக்கு சென்றுள்ளது உதயநிதிக்கு முக்கியத்துவம் தருவதற்காக அவருக்காக அச்சடித்து ஒட்டப்படும் போஸ்டர்களில் கூட தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. எப்படியாவது தலைமையிடம் நல்ல பெயர் வாங்கி விடவேண்டும் என்பதற்காகவே இப்படிப்பட்ட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், சோஷியல் மீடியாவில் இது மிகப்பெரும் வாதத்தையும் எதிர்மறையான வாதங்களையும் கிளப்பி விட்டு விடுகிறது. திமுகவின் இமேஜ் இதன் மூலமாக குறைய வாய்ப்புள்ளது என்ற காரணத்தினால் பிரசாந்த் கிஷோர் இந்த விஷயத்தை ஸ்டாலினிடம் எடுத்துக் கூற அதனை பொறுமையாக மு க ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால்தான் திமுகவின் முப்பெரும் விழா நிகழ்ச்சிகளில் கூட உதயநிதியின் படங்கள் பேனர்களில் இடம்பெறவில்லை என்று அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Thandora Times
Top