Wednesday, 02 Dec, 9.20 am Thandora Times

அரசியல்
விவசாயிகளை ஒடுக்காதீர்கள்.... போராட்டங்களுக்கு தீர்வு காண முயலுங்கள் - சித்தராமையா

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை தொடர்ந்து 6-வது நாளாக நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா.இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது. அதற்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் நியாயமானது. அரசு விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு பதிலாக அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். எங்களின் ஆதரவு விவசாயிகளுக்கு எப்போதும் உண்டு எனத் தெரிவித்துள்ளார்.மேலும், கர்நாடக அரசு கொண்டு வந்துள்ள நில சீர்திருத்த சட்டம் மற்றும் வேளாண்மை சந்தைகள் சட்டத்தை உடனே வாபஸ் பெறவேண்டும். இந்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் விவசாயிகள் பெங்களூருவில் கூடி போராட்டம் நடத்தினர். ஆனால் மாநில அரசு இதை கண்டுகொள்ளவில்லைஎனவும் பதிவிட்டுள்ளார்.
Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Thandora Times
Top