Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கொங்கு மண்டலத்தில் முதல் முறையாக PSG மருத்துவமனையில் அரிய கீஹோல் அறுவை சிகிச்சை சாதனை

கொங்கு மண்டலத்தில் முதல் முறையாக PSG மருத்துவமனையில் அரிய கீஹோல் அறுவை சிகிச்சை சாதனை

கொங்கு மண்டலத்தில் முதல் முறையாக, மிக அரிய மற்றும் சிக்கலான ஜீரண மண்டல மறுவடிவமைப்பு அறுவை சிகிச்சையை முழுமையான லாபரோஸ்கோபிக் (கீஹோல்) முறையில் வெற்றிகரமாக மேற்கொண்டு PSG IMSR & Hospitals மருத்துவமனை புதிய சாதனை படைத்துள்ளது.

PSG மருத்துவமனையின் அறுவை சிகிச்சை குடலியல் துறையைச் சேர்ந்த டாக்டர் மகேந்திரன் எஸ் மற்றும் டாக்டர் எம்.சச்சின் கார்த்திக் தலைமையிலான மருத்துவக் குழு இந்த உயர்நிலை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றியது.23 வயதுடைய இளம் பெண் ஒருவர் தவறுதலாக Harpic ரசாயனத்தை அருந்தியதால்,உணவுக்குழாய் மற்றும் வயிற்று இணைப்பு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது.இதனால் உணவு விழுங்குவதில் சிரமம், அடிக்கடி வாந்தி, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உணவுக்குழாய் சுருங்குதல் போன்ற தீவிர பிரச்சினைகள் ஏற்பட்டன.

பலமுறை எண்டோஸ்கோபிக் சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் நிலைமை சீராகாததால், மருத்துவர்கள் "Laparoscopic Right Colon Coloplasty" எனப்படும் அரிய மறுவடிவமைப்பு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்தனர்.இதில் நோயாளியின் வலது பெருங்குடல் மற்றும் சிறுகுடலின் ஒரு பகுதியை பயன்படுத்தி புதிய உணவுக்குழாய் பாதை உருவாக்கப்பட்டது.

பொதுவாக திறந்த அறுவை சிகிச்சை முறையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் இந்த சிகிச்சை, இம்முறை மிகச் சிறிய துளைகள் வழியாக முழுமையாக கீஹோல் தொழில்நுட்பத்தில் வெற்றிகரமாக செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அறுவை சிகிச்சையின் போது முக்கிய இரத்த நாளங்கள் மற்றும் உறுப்பு பகுதிகளின் அருகே மிகுந்த துல்லியத்துடன் செயல்பட்டு, retro-mesenteric tunneling, substernal conduit உருவாக்கம், கழுத்துப் பகுதி உணவுக்குழாய் இணைப்பு உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு பல்துறை மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்ற நோயாளி, தற்போது திரவ மற்றும் மென்மையான உணவுகளை சிரமமின்றி உட்கொள்ளும் நிலைக்கு திரும்பியுள்ளார்.ஊட்டச்சத்து ஆலோசனை மற்றும் பேச்சுப் பயிற்சி சிகிச்சைக்குப் பிறகு நல்ல உடல்நலத்துடன் வீடு திரும்பியுள்ளார்.
இந்த சாதனை,PSG IMSR & Hospitals மருத்துவமனையின் மேம்பட்ட குறைந்த காயச்சிகிச்சை திறனை வெளிப்படுத்துவதோடு,கடுமையான உணவுக்குழாய் பாதிப்பு நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையையும் வழங்கியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Thandora