தி இந்து தமிழ்

968k Followers

பிரதமர் மோடியுடன் கலந்துரையாடிய கோவை சிபிஎஸ்இ பள்ளி மாணவன்

05 Jun 2021.09:04 AM

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக கடந்த 1-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதுகுறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்துகளை கேட்டறிய மத்திய கல்வித்துறை மற்றும் சிபிஎஸ்இ வாரியம்இணைந்து காணொலி மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு நேற்றுமுன்தினம் ஏற்பாடு செய்திருந்தன.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி திடீரென பங்கேற்றுமாணவர்களுடன் கலந்துரையாடி னார்.

12-ம் வகுப்பு தேர்வு குறித்துஅவர் எடுத்த முடிவு பற்றி மாணவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்.

நேரலையாக நடந்தஇந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்து சுமார் 38 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் ஒருவராக கோவை பீளமேட்டில் உள்ள சிபிஎஸ்இ பள்ளி மாணவர் சித்ராகர் தேப்ரக் பங்கேற்று மோடியுடன் கலந்துரையாடினார்.

அந்த அனுபவம் குறித்து மாணவர் கூறுகையில், 'கரோனா தொற்று பரவல் உள்ள சூழலில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பே முக்கியம்என்று பிரதமர் மோடி பேசினார்.கலந்துரையாடலில் என்னுடைய முறை வந்தபோது, 'பொதுத் தேர்வு ரத்தாகும் என்று நான்எதிர்பார்த்திருந்தேன். தற்போதுஎன்னுடைய கவனம் முழுவதும் போட்டித் தேர்வுகளை நோக்கியேஉள்ளது அதற்காக நான் என்னைதயார்படுத்தி வருகிறேன்.நீங்கள் தேர்வை ரத்து செய்தது சரியான முடிவு' என்று தெரிவித்தேன்' என்றார்.

Disclaimer

Disclaimer

This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt Publisher: The Hindu Kamadenu

#Hashtags