Wednesday, 23 Sep, 10.32 pm தி இந்து தமிழ்

சினிமா
ஓடிடி தளத்தில் 'பாகமதி' இந்தி ரீமேக் ரிலீஸ்?

'பாகமதி' இந்தி ரீமேக்கான 'துர்காவதி' படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது

2018-ம் ஆண்டு அனுஷ்கா நடிப்பில் வெளியான படம் 'பாகமதி'. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான இந்தப் படத்தை ஜி.அசோக் இயக்கியிருந்தார். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

முழுக்க நாயகியை மையப்படுத்திய இந்தப் படத்தில் அனுஷ்கா நடித்திருந்தார். அவருடன் ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மதி ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்திருந்தார்.

தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. 'பாகமதி' படத்தை இயக்கிய ஜி.அசோக்கே இந்தி ரீமேக்கையும் இயக்கினார். அனுஷ்கா கதாபாத்திரத்தில் புமி பெட்னேகர் நடித்து வந்தார்.

'துர்காவதி' என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளது. தற்போது இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருப்பதால், அதை முடித்து ஓடிடி தளத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

'துர்காவதி' படத்தை அக்‌ஷய் குமார், விக்ரம் மல்கோத்ரா மற்றும் பூஷண் குமார் மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட எதுவுமே இதுவரை வெளியாகவில்லை.

Source : www.hindutamil.in

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: The Hindu Kamadenu
Top