சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 2-வது தோல்வியை பதிவு செய்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னையின் டாப் ஆர்டரின் சொதப்பல் காரணமாக 127 ரன்களுக்கு அந்த அணி சுருண்டது.
128 என்ற இலக்கை ராஜஸ்தான் அணி 12.1 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. இந்நிலையில் தான் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை நேற்று எதிர்க்கொண்டது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 7 ரன்களில் நடையை கட்டினார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்களில் அவுட்டான சஞ்சு நேற்றைய போட்டியில் கூடுதலாக 1 ரன்கள் எடுத்து 7 ரன்களில் நடையை கட்டினார்.
ஆயுஷ் மாத்ரே நேற்று அட்டகாசமான ஒரு ஆட்டதை வெளிப்படுத்தினார். இளங்கன்று பயமறியாது என்பது போல் இருந்தது அவரது ஆட்டம். ஆயுஷ் மாத்ரே முதல் பந்தில் இருந்து அட்டாக் செய்ய ஆரம்பித்ததால் சிஎஸ்கேவி ரன் ரேட் 9-க்கு மேல் எகிறியது. களத்தில் இருக்கும் வரை அதனை அப்படியே மெயிண்டன் செய்தார். மறுமுனையில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆங்கர் இன்னிங்ஸ் ஆடினார். பெரிய ஷாட்கள் எதுவும் ஆடாமல் ஆயுஷ் மாத்ரேவுக்கு சிங்கில் ரொட்டேட் செய்து கொடுத்தார். இந்த கூட்டணியை உடைக்க பஞ்சாப் அணி தவறியது. இந்த கூட்டணி சாஹல் பிரித்தார். 10 ஓவர்கள் வரை டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடிய ருதுராஜ் சாஹல் பந்துவீச்சில் சிக்ஸர் விளாச முயன்று கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் 22 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது சிஎஸ்கேவின் ஸ்கோர் 110 ரன்களாக இருந்தது.
: தனது தந்தையின் செயலுக்காக தோனி, கபில் தேவிடம் மன்னிப்பு கோரிய யுவராஜ் சிங் - என்ன காரணம்?
அடுத்து ஷிவம் துபே களத்துக்கு வந்தார். அதிரடியாக ஆடி வந்த ஆயுஷ் மாத்ரே 73 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் இழந்தார். அவர் 5 சிக்ஸர் 6 பவுண்டரிகள் விளாசியிருந்தார். அடுத்து வந்த கார்த்திக் சர்மா 1 ரன்னில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். சர்ப்ராஸ் கான், ஷிபம் துபே ஆகியோர் கொஞ்சம் சமாளித்து ஆட இந்த சீசனில் சென்னை அணி 200 ரன்களை கடந்தது. 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது.
210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி முதல் ஓவரில் இருந்தே சரவெடியாக வெடித்தது. முதல் 2 ஓவர்களிலே மேட்ச் ரிசல்ட் தெரிந்துவிட்டது. முதல் ஓவரில் 14 ரன்கள் 2-வது ஓவரில் 20 ரன்கள் என 2 ஒவர்களில் 34 ரன்கள் எடுத்து மிரட்டினர். பஞ்சாப் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எளிதாக எட்டியது. 209 ரன்கள் எடுத்தும் சிஎஸ்கேவால் டிபெண்ட் செய்ய முடியாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தோல்விக்கு என்ன காரணம்:
போட்டி பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ருதுராஜ் கெய்க்வாட். பந்துவீச்சாளர்களை சாடினார். இது ஒரு நல்ல ஸ்கோர்தான். விக்கெட் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான இருந்தது. பெரிய பவுண்டரிகள் இருந்ததால், இது ஒரு நல்ல ஸ்கோர் என்று நினைத்தேன். எங்களிடம் 3 வேகபந்துவீச்சாளர்கள், 2 சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தது உதவியாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் பந்துவீச்சாளர்களுக்கு இது மோசமான நாளாக இருந்தது. எங்களால் அழுத்தம் கொடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் தேவையான ரன்-ரேட் 11 ஆக உயர்ந்தது. மேலும் சில நல்ல ஓவர்கள் அதை 12-13 ஆக கொண்டு சென்றிருக்கலாம். நிறைய பாசிட்டிவான விஷயங்கள் உள்ளன. ஆயுஷ் அருமையாக பேட்டிங் செய்தார். சிவம் உண்மையில் நன்றாக பேட்டிங் செய்தார். பேட்டிங் அடிப்படையில், எங்களிடம் நல்ல நம்பிக்கை இருந்தது. பந்துவீச்சில், மேம்படுத்த நிறைய இருக்கிறது." என்றார்.
: "சஞ்சீவ் கோயங்கா ஆணவம் பிடித்த கோமாளி"- ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி
அதேவேளையில் தனது பேட்டிங் குறித்து பேசிய கெய்காவ்ட் , நான் கொஞ்சம் நிலைத்து நிற்க விரும்பினேன். விக்கெட் பிடி கொடுத்தது,அதனால் கொஞ்சம் பொறுமையாக இருந்து பிறகு அடிக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் துரதிர்ஷ்டவசமாக, தவறான நேரத்தில் அவுட் ஆகிவிட்டேன்." என்றார்.
சிஎஸ்கே செய்யத்தவறியது என்ன?
சிஎஸ்கே என்றால் சீனியர் அணி, அங்கிள்ஸ் ஆர்மி என்ற விமர்சனங்கள் எழும். நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே நிறைய இளம் வீரர்களை களமிறக்கியுள்ளது. சிஎஸ்கே அணியின் ஒரு கலவையான வீரர்கள் இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே தவிர சர்வதேச போட்டிகளில் ஆடிய பேட்டர்கள் இல்லை. சஞ்சு 7 ரன்களில் நடையை கட்டினார். ஆயுஷ் மாத்ரே ஆடித்து ஆடுகிறார் பொறுமையாக ஆடுகிறேன் என்ற பெயரில் ருதுராஜ் ரசிகர்களின் பொறுமையை சோதித்தார். 22 பந்துகளை எதிர்க்கொண்டு 28 ரன்கள் தான் எடுத்தார். 2 பவுண்டரிகள் மட்டுமே ருதுராஜ் பேட்டில் இருந்து வந்தது. ருதுராஜ் கொஞ்சம் அதிரடி காட்டி கூடுதலாக 20 ரன்கள் எடுத்திருந்தால் சிஎஸ்கே ஸ்கோர் 230-ஐ நெருங்கியிருக்கும். பெரிய அனுபவம் இல்லாத கார்த்திக், பிரசாந்த் வீர். ஆயுஷ் மாத்ரே விக்கெட்டுக்கு பிறகு சர்ப்ராஸ் கானை இறக்கியிருக்கலாம் கார்த்தியை கொண்டு வந்தார் ருதுராஜ் அவரும் 3 பந்துகளில் நடையை கட்ட சிஎஸ்கே மீது திடீர் அழுத்தம் வந்தது.
இதன்காரணமாக சீனியர் வீரர் ஷிபம் துபே பேட்டை சுழற்றவில்லை. அதிரடியாக ஆடும் ஆறுச்சாமி கட்டையை போட ஆரம்பித்தார். சர்ப்ராஸ் கான் தன்னுடைய பணியை கச்சிதமாக செய்தார். இறுதியில் ஷிபம் துபே காட்டிய அதிரடியால் தான் 209 ரன்கள் வந்தது. பந்துவீச்சில் முதல் 2 ஓவரில் கதை முடிந்தது. 120 பந்துகளுக்கு 210 ரன்கள் என்ற இலக்கு 2-ஓவர்களில் மாறியது. 108 பந்துகளுக்கு 176 என குறைந்தது. பஞ்சாப் அணியில் சாஹல் பேட்டர்களுக்கு அழுத்தம் கொடுத்தார். அவரது ஓவர்களில் பெரிய பவுண்டரிகள் எதுவும் கிடைக்கவில்லை. அதனை சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செய்யத்தவறினர். 2 சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் அதனை செய்யமுடியவில்லை. இனி வரும் போட்டிகளிலாவது சிஎஸ்கே தனது தவற்றை திருத்திக்கொண்டு விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

