Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஏப்ரல் மாத முகூர்த்த நாட்கள்: ஏப்ரல் 2026 திருமணத்துக்கு எத்தனை முகூர்த்த நாட்கள் இருக்கு தெரியுமா?

ஏப்ரல் மாத முகூர்த்த நாட்கள்: ஏப்ரல் 2026 திருமணத்துக்கு எத்தனை முகூர்த்த நாட்கள் இருக்கு தெரியுமா?

ரு சில மாதங்களைத் தவிர, திருமணம் செய்வதற்கான சுப முகூர்த்த நாட்கள் ஆண்டு முழுவதும் இருக்கின்றன. ஏப்ரல் மாதம் 2026 திருமணத்திற்கு பல சுப முகூர்த்த தேதிகளை கொண்டுள்ளது.

பஞ்சாங்கம் மற்றும் தமிழ் நாட்காட்டியின்படி, திருமணங்கள் போன்ற மங்களகரமான நிகழ்வுகளுக்கு இந்த மாதத்தில் எட்டு சுபமான தேதிகள் உள்ளன.

ஏப்ரல் மாதம் ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பங்குனி மற்றும் சித்திரை மாதங்கள் கொண்டது. இந்தக் காலகட்டத்தில், சூரியனின் நிலை வலுவாக இருப்பதுடன், பல சுப கிரகங்களும் செயல்படுகின்றன. இதனால்தான் பலரும் ஏப்ரல் மாதத்தில் திருமணம் நடத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். கோடைக்காலம் தொடங்கியிருந்தாலும், கத்திரி வெயிலுக்கு முன்பாக திருமண விழாக்கள் நடைபெறுகின்றன. இதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் மிகவும் விரும்பப்படும் திருமணப் பருவமாக விளங்குகிறது.
அது மட்டுமில்லாமல், சித்திரை மாதம் திருமணம் செய்தால், தம்பதிகள் மகிழ்ச்சியாக செல்வச் செழிப்புடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

ஏப்ரல் 2026 திருமணத் தேதிகள்
பஞ்சாங்கத்தின்படி, ஏப்ரல் 2026 திருமணத்திற்கான சுப முகூர்த்த நாட்கள் பின்வருமாறு:

தேதிகிழமைமுகூர்த்தம் நேரம்நட்சத்திரம்திதி
ஏப்ரல் 15, 2026புதன்கிழமைகாலை 07:08 - மதியம் 12:01உத்திரட்டாதிசுக்ல பட்ச திரயோதசி
ஏப்ரல் 20, 2026திங்கட்கிழமைகாலை 05:51 - மாலை 05:49ரோகிணி / மிருகசீரிஷம்சுக்ல பட்ச சதுர்த்தி / பஞ்சமி
ஏப்ரல் 21, 2026செவ்வாய்க்கிழமைகாலை 05:50 - மதியம் 12:31மிருகசீரிஷம்பஞ்சமி
ஏப்ரல் 25, 2026சனிக்கிழமைஅதிகாலை 02:10 - காலை 05:45 (ஏப் 26)மகம்தசமி
ஏப்ரல் 26, 2026ஞாயிற்றுக்கிழமைஇரவு 09:04 - அதிகாலை 05:42 (ஏப் 29)உத்திரம், அஸ்தம்திரயோதசி
ஏப்ரல் 29, 2026புதன்கிழமைகாலை 07:02 - காலை 08:41அஸ்தம்சுக்ல பட்ச திரயோதசி

ஏப்ரல் மற்றும் சித்திரை மாதம் திருமணம் செய்ய ஏன் சிறப்பான மாதம் தெரியுமா?

  • கிரகங்களின் பலம்: சூரியன் மேஷ ராசியில் உச்சம் பெறும் சித்திரை மாதத்தில், ஆன்மீக அதிர்வுகள் அதிகமாக இருக்கும்.
  • சித்திரை மாதம் வளர்பிறை: வளர்பிறை காலம் சுப நிகழ்வுகளுக்கு இரட்டிப்பு பலனைத் தரக்கூடியது.
  • அக்ஷய திருதியை: ஏப்ரல் 21 அன்று வரும் முகூர்த்த தேதிகள் 'அக்ஷய' - என்றும் அழியாத பலன்களைத் தரும் என நம்பப்படுகிறது.

திருமணத் தேதியைத் தேர்ந்தெடுக்கும்போது இதை மனதில் கொள்ளுங்கள்.
இந்தத் தேதிகள் அனைத்தும் பொதுவாக மங்களகரமானவையாகக் கருதப்பட்டாலும், திருமணத்திற்கான சரியான மங்களகரமான நேரத்தைத் தீர்மானிக்கும்போது, மணமகன் மற்றும் மணமகளின் ஜாதகங்களைப் பொருத்திப் பார்ப்பதும், அவர்களின் தனிப்பட்ட கிரக நிலைகளைக் கருத்தில் கொள்வதும் அவசியமாகும். ஒரே நேரம் அனைவருக்கும் ஒரே மாதிரியாகப் பலனளிக்காது, எனவே ஒரு புரோகிதரையோ அல்லது ஜோதிடரையோ கலந்தாலோசிப்பது சிறந்தது.

ஏப்ரல் மாத ராசிபலன் 2026 - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம். சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான விரிவான ராசி பலன் இங்கே.

Disclaimer: இந்தப்பதிவு ஆன்மீக மற்றும் ஜோதிட நம்பிக்கைகளின் படிஎழுதப்பட்டதாகும். இதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கு அறிவியல் தொடர்பான விளக்கம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi