Dailyhunt
Bengaluru: பெங்களூர் பிளைன் கீ ரைஸ், தொட்டுக்க கத்திரிக்காய் கொஸ்து! வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க! டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்

Bengaluru: பெங்களூர் பிளைன் கீ ரைஸ், தொட்டுக்க கத்திரிக்காய் கொஸ்து! வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க! டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்

பெங்களுரு மக்கள் செய்யும் பிளைன் கீ ரைஸ் செய்முறையை இங்கு பார்ப்போம். பெங்களுரு மக்கள் அடிக்கடி செய்யும் லன்ச் மெனுவில் இது இடம்பெறும்.

காரம் விரும்பாத குழந்தைகளுக்கு இந்த ரைஸ் மிகவும் ஏற்றது. ட்ரை பண்ணி பாருங்க.

பிளைன் கீ ரைஸ் தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி வெங்காயம் தக்காளி நெய் பட்டை ஏலக்காய் கிராம்பு அன்னாசி பூ மராட்டி மொக்கு பிரியாணி இலை

செய்முறை

குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி இலவங்கம், கிராம்பு, அன்னாசி பூ, மராட்டி மொக்கு, பிரியாணி இலை போட்டு தாளிக்கவும். அடுத்தது அதில் பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி போட்டு வதக்கவும். வெங்காயம் பொன் நிறமாக மாறும். பிறகு அதில் பச்சை மிளகாயை நறுக்கி சேர்க்கவும். அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும். இவை நன்கு வதங்கிய பிறகு புதினா, கொத்தமல்லி போடுங்கள். இப்போது தேவையான அளவு உப்பு போட்டு 30 நிமிடம் ஊறா வைத்த பாஸ்மதி அரிசி சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும் . அரிசியை போட்ட பிறகு அனைத்தையும் கலந்துவிட்டு குக்கரை மூடி மிதமான சூட்டில் வைத்து 4 விசில் விடவும். இப்போது சாதம் பூ போல வெந்து வந்திருக்கும். இதுதான் கேரள ஃபேமஸ் பகாரா ரைஸ். இதை சிக்கன், மட்டன், பீப், மீன் குழம்புடன் கேரளா மக்கள் ருசி பார்ப்பார்கள். கேரளா முஸ்லீம் கல்யாணம் வீடுகளில் இந்த ரைஸ் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். கேரளா போனாலும் மறக்காமல் இந்த உணவை ருசி பாருங்கள்.

பெங்களுரு மக்கள் கத்திரிக்காயை வைத்து செய்யும் கொஸ்து செய்முறையை இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க
கொஸ்து செய்ய தேவையான பொருட்கள்

கத்திரிக்காய்- 1/4 கிலோ, பெரிய வெங்காயம் தக்காளி, புளி கரைசல்: ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளிஇஞ்சி பூண்டு விழுது: 1 ஸ்பூன், மஞ்சள் தூள்: 1/4 ஸ்பூன்மிளகாய் தூள்: 1 ஸ்பூன், மல்லித் தூள்: 2 ஸ்பூன்நல்லெண்ணெய்: 4 டேபிள் ஸ்பூன், வேர்க்கடலை: 2 ஸ்பூன்வெள்ளை எள்: 1 ஸ்பூன், மிளகு: 1/2 ஸ்பூன்சீரகம்: 1/2 ஸ்பூன்

சுருக்கமான செய்முறை


வேர்க்கடலை, எள், மிளகு, சீரகம் ஆகியவற்றை வறுத்து, மிக்சியில் நைசாகப் பொடித்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காயைச் சேர்த்து அதன் நிறம் மாறி பாதியளவு வேகும் வரை வதக்கித் தனியாக எடுத்து வைக்கவும்.அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும். பின் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.பின் தக்காளி , மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.வதக்கி வைத்துள்ள கத்திரிக்காயைச் சேர்த்து கிளறி, புளிக் கரைசலை ஊற்றவும். அடுத்து அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை பொடியைச் சேர்த்து கிளறவும். கத்திரிக்காய் கொஸ்து ரெடி.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi