Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Chatru Samhara Mantram in Tamil: எதிரிகளை விரட்டும் சக்திவாய்ந்த முருக மந்திரம் - எப்படி ஜபிக்க வேண்டும்? முழு விளக்கம்

Chatru Samhara Mantram in Tamil: எதிரிகளை விரட்டும் சக்திவாய்ந்த முருக மந்திரம் - எப்படி ஜபிக்க வேண்டும்? முழு விளக்கம்

Sakthi Vaindha Murugar Manthiram Tamil Lyrics: அறுபடை வீடுகளில் சூரசம்காரம் நடந்த படை வீடான திருச்செந்தூர் செந்திலாண்டவர் ஆலயத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடந்த செவ்வாய்க்கிழமை என்று அதிகாலை சத்ரு சம்ஹார பூஜை செய்தது பரபரப்பாக தேசப்பட்டு வருகிறது.

விஜய் மட்டுமல்லாமல், இதற்கு முன்பாகவே பல அரசியல் தலைவர்களும், தொழிலதிபர்களும், வியாபாரிகளும் இந்த சத்ரு சம்ஹார பூஜையை திருச்செந்தூரில் செய்திருக்கிறார்கள். பூஜை செய்ய முடியாதவர்கள் முருகப்பெருமானுக்குரிய சக்தி வாய்ந்த சம்ஹார மந்திரத்தை சொன்னாலே, பூஜை செய்த பலன் கிடைக்கும். இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

திருச்செந்தூர் சத்ரு சம்ஹார பூஜை மந்திரம் - Chatru Samhara Mantram
சூரபர்த்தனை வதம் செய்த ஸ்தலம் என்பதால் முருகப்பெருமான் சம்கார மூர்த்தியாக திருச்செந்தூரில் வழிபடப்படுகிறார். தொழில் போட்டி, தொழிலில் ஏமாற்றியவர்கள் அல்லது பகைவர்கள், நீண்டகால எதிரிகளால் தொல்லை, கடுமையான நஷ்டம் ஆகியவற்றால் பாதிக்க பட்டவர்கள் திருச்செந்தூரில் இந்த சத்து சம்ஹார பூஜையை செய்வார்கள். அதுமட்டுமில்லாமல், நிலம் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை, துணிச்சலுடன் செயல்படவும் இந்த பூஜை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.


இந்த பூஜை செய்ய முடியாதவர்கள் அல்லது யாகத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள், முருகப்பெருமானுக்கு உரிய சத்ரு சமகார மந்திரத்தையும், வேல் பதிகத்தையும் கூறி வரலாம்.

பெண் குழந்தைகளுக்கு வைக்கக் கூடாத பெயர்கள்

சக்தி வாய்ந்த முருகர் சத்ரு சம்ஹார மந்திரம் - Sakthi Vaindha Murugar Manthiram Tamil Lyrics

"ஓம் சத்ரு சம்ஹார சுப்ரமணிய சுவாமியே நமோ நமஹ"

  • இந்த ஒருவரை மந்திரத்தை தினமும் 27 முறை அல்லது 108 முறை கூறி வரலாம்.
  • முதல்முறையாக முருகர் மந்திரத்தைக் துவங்கும் பொழுது செவ்வாய்க்கிழமை அல்லது சஷ்டி நாளில் துவங்குவது இன்னும் விசேஷமானது.
  • இதை, 27 முறை அல்லது 108 முறை சொல்வதற்கு சில நிமிடங்களை ஆகும் என்பதால், சில நிமிடங்களை ஒதுக்கி மந்திரத்தை சொல்வது விரைவில் பலன் தரும்.
  • ஒருவேளை உங்களுக்கு வீட்டில் இந்த மந்திரத்தை தினசரி சொல்ல முடியவில்லை என்றால், நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள முருகர் கோவிலுக்கு சென்று முருகன் சன்னதியில் அமர்ந்து இந்த மந்திரத்தை கூறி வரலாம்.
  • அதேபோல தினசரி இந்த மந்திரத்தை 27 முறையோ அல்லது 108 முறையோ சொல்ல செய்ய முடியாதவர்கள், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் இதை தவறாமல் செய்து வரலாம்.
  • குறைந்தபட்சம் ஆறு வாரங்கள் செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை சொல்லி வந்தாலே, நேர்மையான மாற்றங்களை காண முடியும் என்பது நம்பிக்கை.

பிரச்சனைகளை தீர்க்கும் சக்தி வாய்ந்த முருகன் கோவில்கள்

துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெறும் ஜோதிடம் மற்றும் ஆன்மீக தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள், பாரம்பரிய கருத்துக்கள் மற்றும் ஆன்மிக பார்வைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவை அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டவை அல்ல. இதில் கூறப்படும் ராசிபலன், கிரக நிலைகள், பரிகாரங்கள் அல்லது ஆன்மீக வழிமுறைகள் ஆகியவை ஒருவரின் வாழ்க்கையில் நிகழ்வுகளை கட்டாயமாக மாற்றும் என்று உறுதி செய்ய முடியாது. இது பலருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் பின்பற்றப்படும், ஆன்மீக ரீதியான கருத்துக்கள். இதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கு அறிவியல் தொடர்பான விளக்கம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi