எல்லா பள்ளிகளிலும் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் வகையில் பேச்சு போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி போன்றவறையும் நடத்தப்படும்.
இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும். அந்த வகையில் குழந்தைகள் தினத்தன்று பள்ளிகளில் நடத்தப்படும் பேச்சு போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான டிப்ஸ் இதோ.
1. மாணவர்களை உறங்க விடாத கனவுகள்
மாணவர்கள் காணும் கனவுகள் எப்படி, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை விவரியுங்கள். கல்வியறிவு எவ்வளவு முக்கியம் என்பதையும் அதை எப்படி உறுதி செய்ய வேண்டும் என்பது பற்றி பேசுங்கள். இந்த தலைப்பில் முடிந்த வரை, அப்துல்கலாம், விவேகானந்தரின் வரிகளை சேர்க்க மறக்காதீர்கள்.
2. நாளைய இந்தியாவின் சக்தி
அறிவியல், பண்பாடு, பொதுவியல் பார்வையில் இந்தியாவின் எதிர்காலத்தில் குழந்தைகளின் பங்கு, முக்கியத்தும், அவர்களின் சக்தி குறித்து மிகவும் ஆழமாக பேசலாம். இன்றைய தலைமுறையினர் நாளைய உலகத்தை எப்படி ஆள போகிறார்கள் என்பதை பற்றி பேசலாம். தலைப்பே அனைவரின் கவனத்தையும் முதலில் ஈர்க்கும்.
3. கல்வி எனும் சொத்து
ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையிலும் கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி பேசவும். கல்வி தரும் வாய்ப்பு, சுதந்திரம், நம்பிக்கை, சவால்களை எதிர் கொள்வது பற்றி பள்ளி மாணவர்கள் நடையில் இருந்து எழுச்சியுடன் பேசுவோம்.
4. குழந்தைகள் தினம்
குழந்தைகள் தினம் என்பது கொண்டாட்டங்களின் நாள் மட்டுமல்ல, சமூகத்தில் குழந்தைகளின் முக்கியத்துவம், அவர்களின் பாதுகாப்பு, சட்டகள், உரிமைகள், வளர்ச்சி கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை பற்றி தெறிப்புடன் பேசுவோம். ஒவ்வொரு குழந்தையும் எதிர்காலத்தில் முழு திறனை அடைந்திட ஒன்றாக பாடுபடுவோம் என்பதை எடுத்துரையுங்கள்.
குழந்தைகள் தின பேச்சு போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் இதுப்போன்ற தலைப்புகளை தேர்ந்தெடுப்பது நடுவர்கள் உட்பட அனைவரையும் ஈர்க்கும். உங்களின் பேச்சு அனைவரையும் போய் சேரும்.

