Dailyhunt
Chithirai Amavasai: சித்திரை மாத அமாவாசை 2026: எந்த தேதியில் வருகிறது, எப்போது தர்ப்பணம் செய்ய வேண்டும்?

Chithirai Amavasai: சித்திரை மாத அமாவாசை 2026: எந்த தேதியில் வருகிறது, எப்போது தர்ப்பணம் செய்ய வேண்டும்?

Chithirai Amavasai 2026 Date and Time: தமிழ் பஞ்சாங்கம் மற்றும் தமிழ் ஆண்டுகளின் அடிப்படையில், 12 மாதங்களில், முதல் மாதம் சித்திரை மாதம்.

சித்திரை பிறப்பும், தமிழ் வருடப்பிறப்பும் ஒரே நாளில் கொண்டாடப்படும். சித்திரை மாதத்தில் வரும் அமாவாசை இந்த ஆண்டு ஏப்ரல் 17, 2026 வியாழக்கிழமை அன்று வருகிறது. அபூர்வமாக சில நாட்களில் அமாவாசை திதி இரண்டு நாட்களில் வரும், அந்த வகையில், இந்த அமாவாசையும் 2 நாட்களில் வருகிறது. சூரியன் உச்சமாகும் மாதம் வரும் சித்திரை அமாவாசை, பித்ரு தோஷம் போக்கும்! சித்திரை அமாவாசை தேதி, தர்ப்பணம் செய்ய உகந்த நேரம் மற்றும் இதன் முக்கியத்துவம் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

சித்திரை அமாவாசை 2026: தேதி மற்றும் திதி நேரம் | Chithirai month amavasai 2026 date and time

சித்திரை அமாவாசை 2026, ஏப்ரல் 17 வெள்ளிக்கிழமை அன்று வருகிறது.

  • சித்திரை அமாவாசை 2026 திதி தொடக்க நேரம்: ஏப்ரல் 16, 2026 - 7:31 pm
  • சித்திரை அமாவாசை 2026 திதி முடியும் நேரம்: ஏப்ரல் 17, 2026 - 5:47 pm

அட்சய திருதியை எப்போது வருகிறது?

வியாழக்கிழமை அன்று இரவு 7.30க்கு துவங்கும் அமாவாசை திதி, வெள்ளி மாலை 5.47 மணி வரை நீடிக்கிறது. உதய திதியின் அடிப்படையில், வெள்ளிக்கிழமை அன்று அமாவாசை அனுஷ்டிக்கப்பட வேண்டும். வெள்ளிக்கிழமை மாலை வரை அமாவாசை திதி இருப்பதால், வெள்ளி அன்றே அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணம் செய்யும் பொழுது கிழக்கு திசை நோக்கி நின்றவாறு அல்லது அமர்ந்தவாறு மந்திரங்களை சொல்ல வேண்டும்.

சித்திரை அமாவாசை 2026 தர்ப்பணம் செய்ய உகந்த நேரம்

அமாவாசை திதி நாள் முழுவதும் நீடிப்பதால், மதிய நேரத்திற்குள் தர்ப்பணம் செய்வது உகந்தது. வெள்ளிக்கிழமை காலை 10:30 - 12:00 வரை ராகு காலம் என்பதால், இதற்குள்ளாக அமாவாசை தர்ப்பணம் செய்து முடிப்பது நல்லது, காலை செய்ய முடியாதவர்கள், மதியம் 12 மணிக்கு மேல் சித்திரை அமாவாசைக்கான தர்ப்பணத்தை செய்து முடிக்கலாம்.

சித்திரை அமாவாசை 2026 அன்று நடக்கும் அபூர்வ கிரக சேர்க்கை

அமாவாசை என்று சூரியன் மற்றும் சந்திரன் ஒரே ராசியில் சஞ்சரிப்பார்கள். சித்திரை மாதம் வரும் அமாவாசை அன்று நடக்கும் சிறப்புகளில் ஒன்று, உச்சமடையும் சூரியனாகும். மேஷம் ராசியில் சுக்கிரன், சூரியன் மற்றும் சந்திரன் இணைந்திருக்கும் காலத்தில் அமாவாசை ஏற்படுகிறது. அந்த வகையில், அமாவாசை என்று திரிகிரக யோகம் என்ற அபூர்வ யோகத்தையும் கொடுக்கிறது.

Disclaimer: இந்தப்பதிவு ஆன்மீக மற்றும் ஜோதிட நம்பிக்கைகளின் படிஎழுதப்பட்டதாகும். இதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கு அறிவியல் தொடர்பான விளக்கம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi