Coimbatore Crime News: கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் கோமதி (வயது 65). இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இருவரும் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டனர். கோமதி மட்டும் ராமநாதபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 3-ம் தேதி இவரது மகள் ராதிகா லண்டனில் இருந்து தனது தாயை பார்ப்பதற்காக கோவை வந்துள்ளார். வீட்டிற்கு வந்து போது வீடு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று அம்மா என்று அழைத்துள்ளார் எந்த பதிலும் இல்லை. இதனையடுத்து படுக்கை அறைக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு கோமதி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர் கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தனர். அவர்கள் ராதிகாவை சமாதானம் செய்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோமதியின் கழுத்தில் காயம் இருந்தது. மேலும் அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்தன. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் கோமதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை குறிவைத்து இந்த கொலை, கொள்ள சம்பவம் அரங்கேறியுள்ளதால் நன்கு அறிந்தவர்கள் மூலம் இந்த கொலை நடந்திருக்கும் என போலீசார் சந்தேகத்தினர். மேலும் கோமதியின் செல்போன்களும் மாயமாகி இருந்தன. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
: புதுச்சேரியில் இன்று மின் தடை அறிவிப்பு.. 2 மணி நேரம் இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது
கடந்த சில மாதங்களுக்கு ராமநாதபுரத்தில் டாக்டர் ஒருவரின் தாயாரை ஒரு நேபாள தம்பதி கொலை செய்துவிட்டு தலைமறைவானது. அதேபோல் இந்த சம்பத்திலும் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு இருந்ததால் வடமாநில கொள்ளையர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருப்பார்களா என்ற சந்தேகம் போலீசுக்கு வலுத்தது. இந்நிலையில் போலீசார் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது இளைஞர் ஒருவர் துணியுடன் வந்து செல்லும் காட்சி அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த நபர் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சலவைத்தொழிலாளி ரஞ்சித்குமார் என்பது தெரியவந்தது. ரஞ்சித்குமாருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது தெரியவந்தது. ரஞ்சித்குமார் குறித்து விசாரிக்கையில் அவர் தனது மனைவியுடன் வெளியூர் சென்றுவிட்டதாக போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் அந்த நபரை தேடிச்சென்றனர். தனது மனைவியுடன் அந்த நபர் ராமேஸ்வரம் சென்றது தெரியவந்தது. ராமேஸ்வரம் சென்ற தனிப்படை போலீசார் ரஞ்சித்குமார் பிடித்து விசாரித்தனர்.
: அணில்களின் அட்டூழியம்..! 20 பேரை கடித்து அட்டகாசம்.. பதறும் ராஜஸ்தான் பல்கலைக்கழகம்
விசாரணையில் பகீர் தகவல்
போலீசாரில் விசாரணையில் மூதாட்டியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், "ரஞ்சித்குமாருக்கு திருமணமாகி 3 மாதங்கள் ஆகிறது. சலவை துணிகளை கொடுக்க மூதாட்டி வீட்டிற்கு அடிக்கடி ரஞ்சித் சென்று வந்துள்ளார். அவர் கழுத்தில் நிறைய நகைகளை அணிந்திருப்பதும் வீட்டில் தனியாக இருப்பதை ரஞ்சித் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு நகைகளை பறிக்க திட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று மூதாட்டி வீட்டிற்கு துணிகளை கொடுக்க சென்றுள்ளார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றபோது அதிர்ச்சியடைந்த பெண் சத்தம் போட்டுள்ளார்.
அப்போது கையில் வைத்திருந்த துணியால் துணியால் மூதாட்டியை கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு அவர் அணிந்து இருந்த தங்கநகைகளை கொள்ளையடித்துள்ளார். வீட்டில் இருந்த செல்போன்களை தூக்கி வெளியில் வீசியுள்ளார். தங்கநகைகளை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று அங்குள்ள ஒரு நகைக்கடையில் விற்று ரூ.2 லட்சம் பணம் பெற்றுள்ளார். பின்னர் மனைவியை அழைத்துக்கொண்டு ராமேசுவரத்துக்கு சுற்றுலா சென்றவரை தனிப்படை போலீசார் பிடித்தனர். இந்த கொலைக்கும் ரஞ்சித்குமார் மனைவிக்கும் எந்த தொடர்பும் இல்லை. மூதாட்டியை கொலை செய்ததும் நகைகளை கொள்ளையடுத்து அதனை விற்று சுற்றுலா சென்றது எதுவும் அந்த இளம்பெண்ணுக்கு தெரியவில்லை. போலீசார் ரஞ்சித்குமாரை கைது செய்து நடந்த விவரத்தை கூறியபோது அந்தப்பெண் அதிர்ச்சியடைந்தார்" எனக் கூறினர்.

