Coimbatore Falls:
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளதால், கோவைக்கு இயற்கையிலேயே ஒரு தனித்துவமான அழகும், அமைதியும் உண்டு.
அதை யாரும் மறுக்க முடியாது. கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்டாலும், அதன் உண்மையான அழகு அங்கிருக்கும் தொழிற்சாலைகளில் இல்லை அதைச் சுற்றியுள்ள இயற்கை விடியலில் தான் உள்ளது. செழுமை, பசுமை என கோவை இயற்கையின் பரிசுக்கு சான்றாக விளங்குகிறது.
சிறுவாணி அருவி கோயம்புத்தூரில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இது சிறுவாணி ஆற்றில் உருவாகியுள்ள அருவியாகும். இந்த அருவிக்கு செல்ல வனத்துறையின் அனுமதி தேவை, மேலும் சிறிய நடைபயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
பொள்ளாச்சியில் இருக்கும் தென்னந்தோப்புகள், குரங்கு அருவி மற்றும் ஆழியாறு அணைப் பகுதிகள் போன்ற கோவையை இன்னும் அழகாக்குகிறது. கம்பீரமாக உயர்ந்து நிற்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காட்சி கண்ணுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. பார்க்க மட்டுமில்லை குளித்து ஆட்டம் போடவும் கோவையில் பல அருவிகள், நீர்வீழ்ச்சிகள், அணைக்க்ட்டுகள், குளம், ஏரி ஆகியவை ஏரளமாக உள்ளனர். அதன் லிஸ்டை இப்போது பார்ப்போம். கோயம்புத்தூர், அதன் அருகில் மற்றும் கோவையை சுற்றியுள்ள அருவிகள் இவை தான்.
Coimbatore: கோயம்புத்தூர் அருவிகள்
வீரபதி அருவி
கோயம்புத்தூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில், அன்னூர் அருகே அமைந்துள்ளது. அதிகம் மக்கள் செல்லாத , அமைதியான சுற்றுலா இடமாக இது விளங்குகிறது. பயணிகள் எந்த அனுமதியும் பெற தேவையில்லை.
கோவை குற்றாலம்
கோயம்புத்தூரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளையாறு ஆற்றில் அமைந்துள்ள இது இயற்கை சூழலில் அமைந்த அழகான அருவியாகும். இந்த இடத்திற்கும் செல்ல டிக்கெட் எடுக்க வேண்டும்.
தாடியந்தூக்கி அருவி
கோயம்புத்தூரில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் வால்பாறையில் அமைந்துள்ளது. மலைப்பகுதியில் அமைந்த இந்த அருவிக்கு செல்ல வனத்துறையின் அனுமதி தேவை, மேலும் சிறிய மலைப்பயணம் மேற்கொள்ள வேண்டும்.
மாஞ்சோலை அருவி
கோயம்புத்தூரில் இருந்து 280 கிலோமீட்டர் தொலைவில், திருநெல்வேலியில் அமைந்துள்ளது. தேயிலை தோட்டங்களுக்கு நடுவில் அமைந்த இந்த அருவி சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது.
மேலும்
மயிலாடி அருவி
கோயம்புத்தூரில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பாறைகளின் நடுவே அமைந்த இந்த அருவி இயற்கையை அமைதியுடன் அனுபவிக்க சிறந்த இடம். இதை பார்க்க டிக்கெட் தேவையில்லை
மேலும்
அத்திரப்பில்லி அரு
கோயம்புத்தூரில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில், கேரளாவில் அமைந்துள்ள இது "இந்தியாவின் நயாகரா அருவி" என அழைக்கப்படுகிறது. இங்கு செல்லும் சுற்றுலா அனுபவம் சிறப்பாக இருக்கும்
குருதி அருவி
கோயம்புத்தூரில் இருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் வால்பாறையில் அமைந்துள்ள இது பசுமை நிறைந்த காடுகளுக்குள் அமைந்துள்ளது.மண்ணோடு அரித்து வரும் இந்த அருவியின் நீர் செம்மையாக இருப்பதால் குருதி அருவி என்று அழைக்கப்படுகிறது.

