Dhanusu Guru Peyarchi Palan 2026 ஜூன் மாதம் இரண்டாம் தேதி குரு பெயர்ச்சி நடக்கிறது. மிதுன ராசியில் 7வது வீட்டில் சஞ்சரித்து வந்த குரு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு 8வது வீடான கடக ராசிக்குச் சென்று அங்கு உச்சம் பெறுகிறார்.
தனுசு ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசி நாதனான குரு பகவான் 8-ம் இடம் என்ற மறைவிட ஸ்தானத்திற்குச் சென்றாலும், அவர் தனது உச்ச வீடான கடகத்தில் அமர்வதால் 'விபரீத ராஜயோக' பலன்களைத் தந்து, திடீர் திருப்பங்களையும் அசுர வளர்ச்சியையும் கொடுப்பார்.
Guru Peyarchi Palangal 2026 - 2027 - தனுசு ராசிக்கு 8வது வீட்டில் உச்சம் பெரும் குரு
தனுசு ராசிக்கு 8-ம் இடம் என்பது அஷ்டம ஸ்தானம் ஆகும். பொதுவாக 8-ல் குரு மறைவது அலைச்சல்களையும் அனாவசியக் பயங்களையும் தரும் என்று சொல்லப்பட்டாலும், உங்கள் ராசி நாதனே அங்கு உச்சம் பெறுவதால் கெடுதல்கள் அனைத்தும் நன்மையாக மாறும். "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்" என்பதற்கேற்ப, எதிர்பாராத பல நல்ல திருப்பங்கள் உங்கள் வாழ்வில் அரங்கேறும்.
Mesham Guru Peyarchi Palan 2026: மேஷம் குரு பெயர்ச்சி பலன்கள்: 4ம் இடத்தில் உச்சம் பெறும் குரு; சுகபோகங்களும், சொத்து சேர்க்கையும் உண்டாகும்!
குரு பெயர்ச்சி 2026 - 2027 தனுசு ராசிக்கு பொதுப்பலன் - Dhanusu Jupiter Transit General Prediction
- பொருளாதார ரீதியாகப் பெரிய திருப்பங்கள் ஏற்படும்; நீண்ட நாட்களாக வராமல் இருந்த பழைய கடன்கள், நிலுவைத் தொகைகள் எதிர்பாராமல் கைக்கு வரும்.
- இன்சூரன்ஸ், உயில் சொத்துக்கள் அல்லது பூர்வீகப் பணப் பலன்கள் மூலம் திடீர் நிதி ஆதாயம் உண்டாகும்.
- தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் அனைத்தும் தானாகவே விலகிப் போகும்.
- உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு மற்றும் அலைச்சல்கள் இருந்தாலும், அதற்கேற்ற பெரிய பதவிகளும், கௌரவமும் உங்களைத் தேடி வரும்.
- நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த நீதிமன்ற வழக்குகள் மற்றும் வாரிசு சம்மந்தப்பட்ட விவகாரங்கள் உங்களுக்குச் சாதகமாக முடிவடையும்.
- ஆன்மீகம், ஜோதிடம் மற்றும் ஆராய்ச்சித் துறையில் இருப்பவர்களுக்குப் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் உலகளாவிய அங்கீகாரம் கிடைக்கும்.
குரு பெயர்ச்சி 2026 - 2027 தனுசு ராசிக்கு குரு பார்வையின் பலன்
குருபகவான் உங்கள் ராசிக்கு 12வது வீடான விருச்சிக ராசியைப் பார்ப்பதால், வீண் செலவுகள் குறையும். வீடு, வாகன முதலீடுகள் அல்லது பிள்ளைகளின் கல்விக்கான சுப விரயங்கள் அதிகரிக்கும். தூரதேசப் பயணங்கள் அனுகூலம் தரும்.
குருபகவான் உங்கள் ராசிக்கு 2வது வீடான மகர ராசியை பார்ப்பதால், பண வரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த வாக்குவாதங்கள், மனஸ்தாபங்கள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உங்கள் பேச்சிற்குப் பிறர் கட்டுப்படும் சூழல் உருவாகும்.
குரு பகவான் உங்கள் ராசிக்கு 4வது வீடான மீன ராசியைப் பார்ப்பதால், தனது சொந்த வீடான 4வது இடத்தைப் பார்ப்பதால் புதிய வீடு, வாகன சேர்க்கை உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் குணமாகும்.
Viruchigam Guru Peyarchi Palan 2026: நினைத்தது நடக்கும், பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெறும் குரு; அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் பொற்காலம்!
குரு பெயர்ச்சி 2026 - 2027 தனுசு ராசிக்கு குரு பெயர்ச்சியில் கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயங்கள்
8வது வீட்டில் குரு இருப்பதால் புதிய தொழில் தொடங்குவதற்கோ அல்லது வியாபார விரிவாக்கத்திற்கோ பெரிய அளவில் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.
மற்றவர்களின் விவகாரங்களில் தலையிட்டு ஜாமீன் கையெழுத்துப் போடுவதையோ அல்லது பஞ்சாயத்து செய்வதையோ முற்றிலும் தவிர்க்கவும்.
ஆரோக்கியத்தில் சிறு அலைச்சல்களால் சோர்வு ஏற்படலாம், குறிப்பாகக் கால்வலிகள் அல்லது அஜீரணக் கோளாறுகள் வரக்கூடும் என்பதால் சரியான நேரத்திற்கு ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளவும்.
குரு பெயர்ச்சி 2026 - 2027 - பரிகாரம், வழிபாடு
வியாழக்கிழமைகளில் சீரடி சாயிபாபா அல்லது ராகவேந்திரர் சுவாமிகளை நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மன அமைதியையும், விபரீத ராஜயோக பலன்களையும் முழுமையாகப் பெற்றுத் தரும்.
Disclaimer: இந்தப் பதிவு ஆன்மீக மற்றும் ஜோதிட நம்பிக்கைகளின் படி எழுதப்பட்டதாகும். இதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கு அறிவியல் தொடர்பான விளக்கம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

