Dailyhunt
DMK Election Song Lyrics: 'ஸ்டாலின் தொடரட்டும்'.. திமுக தேர்தல் பிரச்சார பாடலின் முழு வரிகள் இதோ!

DMK Election Song Lyrics: 'ஸ்டாலின் தொடரட்டும்'.. திமுக தேர்தல் பிரச்சார பாடலின் முழு வரிகள் இதோ!

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்பரையை பிராதான கட்சிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

இன்றைய டிஜிட்டல் உலகில் பரப்புரை யுக்திகளை அரசியல் கட்சிகள் இணைவாசிகளை கவரும் வகையில் வடிவமைத்து வருகின்றன.

அந்த வகையில், ஆளும் திமுக, விஜயின் தவெக போன்ற கட்சிகள் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ பரப்புரை பாடல்களை வெளியிட்டுள்ளன. இந்த பாடல்கள் இணையத்தில் குறிப்பாக யூடியூப் தளத்தில் ஈர்ப்பையும் கவனத்தையும் பெற்று வருகின்றன.

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தரப் போறாரு என்ற பாடலை பரப்புரை பாடலாக வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வரப்போகும் தேர்தலுக்கான திமுகவின் அதிகாரப்பூர்வ பரப்புரை பாடல் 'ஸ்டாலின் தொடரட்டும்..தமிழ்நாடு வெல்லட்டும்!' என்பது வெளியாகி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

சுமார் 4 நிமிடம் வரும் வகையில் இந்த ஸ்டாலின் தொடரட்டும் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. திமுகவின் இந்த தேர்தல் பிரச்சார பாடலின் முழு பாடல்வரிகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

ஸ்டாலின் தொடரட்டும் பிரச்சாரப் பாடல் வரிகள்

விழும் மழைத் துளி என்றும்
நிலம் மட்டுமே தேடும்
எங்கள் உயிர் துளி என்றும்
தமிழ் மட்டுமே பாடும்.
சாஸ்திரம் இங்கு பழங்கதையே கூறும்
புது சரித்திரம் படை தலைவனையே பாடும்

பெரும் பெரும் பருந்து
வரும் வரும் ஒளிஞ்சு
நடிப்பினை புரிஞ்சு
விரட்டுவோம் துணிஞ்சு

ரௌத்திரம் தான்.. சௌத் சைடு இந்தியா பார்..
ஜாக்கிரதை தப்பாக தொட்டாக்கா வார்..
எங்க வண்ணம் கருப்பு சிவப்பு சார்..
அகர முதல தொட்-டு..
தாடி கிழவன் பிளட்-டு..

உதிச்சது உதய சூரியன் பார்..
பாட்டன் பூட்டன் கொடிய புடிச்சதால்
மாறமாட்டோம் வெளிச்சம் கிடைச்சதால்..
அகர முதல தொட்டு
அறிஞர் அண்ணா பிளட்-டு..
அகர முதல தொட்டு
தலைவர் கலைஞர் பிளட்-டு..

எங்க வாழ்க்கை கேக்குற ஏங்குற
கேள்வி கணையில தலைமுறையில
உதிச்ச தலைவன் டா..
சொன்ன தெல்லம் செஞ்சி முடிச்சு
சிரிச்ச தலைவன்டா..

மக்களை பிரிக்க நினைக்கும்
சாதி மதத்தையும் சாக்கடை புத்தியையும்
எதிர்த்த இயக்கம்டா..
ஊருக்குள்ள நீதியை வெதச்ச இயக்கம்டா..

இருண்டு கிடத்த பூமியில வெளிச்சம் தந்த சூரியனே..
மிரண்டு கிடந்த நெஞ்சுக்குள்ள தைரியம் தந்த திராவிடனே..
மீண்டும் வா தலைவனே..
வென்று வா ஸ்டாலினே..
மீண்டும் வா தலைவனே..
வென்று வா ஸ்டாலினே..

: 'மெரள போகுது ஸ்டேட்டு..' தவெக புதிய பிரச்சார பாடலின் முழு வரிகள் இதோ!

பெரும் பெரும் பருந்து
வரும் வரும் ஒளிஞ்சு
நடிப்பினை புரிஞ்சு
விரட்டுவோம் துணிஞ்சு

ரௌத்திரம் தான்.. சௌத் சைடு இந்தியா பார்..
ஜாக்கிரதை தப்பாக தொட்டாக்கா வார்..
எங்க வண்ணம் கருப்பு சிவப்பு சார்..
அகர முதல தொட்டு..
தாடி கிழவன் பிளட்-டு..

உதிச்சது உதய சூரியன் பார்..
பாட்டன் பூட்டன் கொடிய புடிச்சதால்
மாறமாட்டோம் வெளிச்சம் கிடைச்சதால்..
அகர முதல தொட்டு
அறிஞர் அண்ணா பிளட்-டு..

அகர முதல தொட்டு
தலைவர் கலைஞர் பிளட்-டு..
அகர முதல தொட்டு
தலைவர் கலைஞர் பிளட்-டு..

இருண்டு கிடத்த பூமியில வெளிச்சம் தந்த சூரியனே..
மிரண்டு கிடந்த நெஞ்சுக்குள்ள தைரியம் தந்த திராவிடனே..

ஸ்டாலின் தொடரட்டும்..
தமிழ்நாடு வெல்லட்டும்
நம்ம ஸ்டாலின் தொடரட்டும்..
தமிழ்நாடு வெல்லட்டும்

ஸ்டாலின் தொடரனும்
தமிழ்நாடு வெல்லுனும்..

தமிழ்நாடு போராடும்
தமிழ்நாடு வெல்லும்..

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi