Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Dmk Juli:  தேர்தலில் விஜய் வெற்றி.. காணாமல் போன ஜூலி! வலை போட்டு தேடிய தவெக தொண்டர்கள், ரசிகர்களுக்கு தழுதழுத்த குரலில் பதில்!

Dmk Juli: தேர்தலில் விஜய் வெற்றி.. காணாமல் போன ஜூலி! வலை போட்டு தேடிய தவெக தொண்டர்கள், ரசிகர்களுக்கு தழுதழுத்த குரலில் பதில்!

Dmk Juli: திமுக ஆதரவாளரான ஜூலி "நான் எங்கும் போகவில்லை" என வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

தவெக வெற்றிக்கு பிறகு ஜூலியை காணவில்லை என ரசிகர்களும் தொண்டர்களும் தேடி வந்தனர்.

விஜய் அரசியல் வருகைக்கு பின்னர் பல்வேறு சர்ச்சகளை, விமர்சனங்களை சந்தித்தார். ஆனாலும் தனது முடிவில் நிலைபாடாக இருந்தார். எந்த கட்சியுடனும் கூட்டணி செல்லாமல் தனியாக 233 தொகுதிகளில் களம் கண்டார். அதன் முடிவு மே 4 இன்று காலை முதல் வெளியாக தொடங்கியது. மாலை 7 மணி நிலவரப்படி தவெக 108 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. கணிக்க முடியாத வெற்றியை பதித்துள்ளனர் தவெக வேட்பாளர்கள். விஜய் முதல்வராக அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. முதல் முறை தேர்தலை சந்தித்து, மாபெரும் வெற்றி கண்டிருக்கிறார் தவெக தலைவர் விஜய்.

இந்நிலையில் திமுகவின் தீவிர ஆதரவாளரான ஜூலி, தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுகவிற்காக சென்னை முழுவதும் சுழன்று பணியாற்றினார். குறிப்பாக, விஜய் போட்டியிட்ட பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில், அவருக்கு எதிராக மிகத் தீவிரமான பிரச்சாரங்களை மேற்கொண்டார். அதுமட்டுமின்றி, தனது சமூக வலைதளப் பக்கங்களில் விஜய் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் நடவடிக்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்து தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். ஆனால் இன்று காலை முதலே ஜூலி சோஷியல் மீடியாவில் காணவில்லை. இதுவே திமுக ஜெயித்திருந்தால் முதல் நபராக ஓடி வந்து வீடியோ போட்டிருப்பார் ஜூலி, ஆனால் தவெக வெற்றிக்கு பிறகு ஆள காணமும் என தவெக ரசிகர்கள், தொண்டர்கள் கமெண்ட் செய்து வந்தனர்

வெற்றி வாகை சூடிய விஜய்... சினிமா பிரபலங்களிடம் இருந்து குவியும் வாழ்த்துக்கள்! தெறிக்கும் விசில் சத்தம்!

இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஜூலி தனது இன்ஸ்டாவில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் " தவெக வெற்றிக்கு வாழ்த்துகள். அரசியலில் நிரந்தர வெற்றியும் கிடையாது நிரந்தர தோல்வியும் கிடையாது. இதை நல்லா தெரிஞ்சவங்க திமுக காரங்க. சட்டமன்றத்துல திமுகவை எதிர்த்து உட்காரும்போது அது எவ்வளவு டேஞ்சர்-னு உங்களுக்கு தெரியும்தோல்வியைக் கண்டு பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல. எதிர்க்கட்சியாக இருக்கும் போது நாங்கள் இன்னும் மூர்க்கமாக செயல்படுவோம்.தைரியம் இருந்தால் வாருங்கள், களத்தில் சந்திக்கலாம். சண்டை செய்வதெல்லாம் திமுகவினருக்கு மிகவும் சாதாரணமான விஷயம்." என்றார்.

ஆனால் இந்த வீடியோவில் ஜூலியின் முன்பு இருந்த தைரியமும், அழுத்தமும் இல்லை. தழுதழுத்த குரலில் தான் பேசுகிறார். ஜூலி, தவெக வெற்றியை கண்டு பயந்து விட்டார் என அந்த வீடியொவுக்கு கீழ தவெக தொண்டர்கள், ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தேர்தலில் தவெக விஜய் வெற்றி... தலைவா தலைவா பாடலை டெடிகேட் செய்யும் ரசிகர்கள் கூட்டம்.. முழு லிரிக்ஸ் இதோ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi