Kumbha rasi ezharai sani: இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சனிப்பெயர்ச்சி காலகட்டத்தில், மூன்று ராசிகளுக்கு ஏழரை சனி நடக்கும்.
அந்த வகையில் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி காலகட்டமான பாதசனி நடந்து வருகிறது. ஒவ்வொரு ராசிக்கும் ஏழரைச் சனி வெவ்வேறு விதமான பலன்களை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கும்ப ராசிக்காரர்களுக்கு பலவிதமான நெருக்கடிகள் வீண் விரயங்கள் எதிர்பாராத செலவுகள் ஆகியவற்றை ஏழரைச் சனி காலகட்டத்தில் எதிர்கொண்டிருப்பார்கள். கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ஏழரைச் சனி எப்போது முடிகிறது, அடுத்து வரும் சில மாதங்களுக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
கும்ப ராசி ஏழரை சனி 2026 முடிவு - Ezharai sani 2026 ending
கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி என்பது வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் ஆகிய இரண்டின் படி வெவ்வேறு காலகட்டத்தில் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2027 ஜூன் மாதம் கும்ப ராசிக்கு ஏழரை சனி முடிகிறது. மீன ராசியில் சஞ்சரித்து வரும் சனி பகவான் மேஷ ராசிக்கு செல்லும் பொழுது கும்ப ராசிக்கு முழுவதுமாக ஏழரை சனியின் பிடியில் இருந்து விடுபடுவார்கள்.
- வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2028 ஜனவரி மாதம் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கோவில்களில் பின்பற்றப்படும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2028 தொடக்கம் வரை மீன ராசியில் தான் சனி பகவான் சஞ்சரிப்பார்.
ஏழரை சனியின் கடைசி காலமான பாத சனி அல்லது குடும்ப சனி நடக்கும் போது, கும்ப ராசியினர் பின்வரும் சிக்கல்களை எதிர்கொள்ளலாம்.
- திடீர் செலவுகள் உண்டாகும்
- வரவுக்கு நிகரான செலவுகள் இருக்கும்
- மருத்துவ செலவுகள் அலைச்சல் இருக்கும்
- வீணான பேச்சால் தொந்தரவு உண்டாகும்
- குடும்பத்தில் அவ்வபோது சண்டை சச்சரவு உண்டாகலாம்
அடுத்து வரும் சில மாதங்களுக்கு கும்ப ராசிக்காரர்களுக்கு நடக்கும் நல்ல விஷயங்கள்
- நல்ல வேலை கிடைக்கும், வருமானம் சீராக இருக்கும்
- வெளிநாட்டு வாய்ப்புகள், முயற்சிகள் கைகூடும்
- திருமண யோகம் உள்ளது
கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி காலகட்டத்தில் பெரிய சிக்கல்கள் எதுவும் ஏற்படாது. குறிப்பாக, குருபகவான் உச்சமாக சஞ்சலித்து சனி பார்ப்பதால், சுபகாரியங்கள் நடக்கும், வருமானம் அதிகரிக்கும். பெரிய சிக்கல்கள் அல்லது பாதிப்புகள் ஏதும் ஏற்படாது.
துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெறும் ஜோதிடம் மற்றும் ஆன்மீக தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள், பாரம்பரிய கருத்துக்கள் மற்றும் ஆன்மிக பார்வைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவை அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டவை அல்ல. இதில் கூறப்படும் ராசிபலன், கிரக நிலைகள், பரிகாரங்கள் அல்லது ஆன்மீக வழிமுறைகள் ஆகியவை ஒருவரின் வாழ்க்கையில் நிகழ்வுகளை கட்டாயமாக மாற்றும் என்று உறுதி செய்ய முடியாது. இது பலருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் பின்பற்றப்படும், ஆன்மீக ரீதியான கருத்துக்கள். இதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கு அறிவியல் தொடர்பான விளக்கம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

