Gold Rate Today: சர்வதேச பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம், வட்டி விகித ஏற்றத்தாழ்வுகள், புவியியல் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் (Gold) விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ
இன்றைய விலை நிலவரம் (Gold):
சென்னையில் இன்றைய (மே 01, வெள்ளிக்கிழமை) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் பற்றி தெரிந்து கொள்ளலாம். சென்னையில் (chennai) நேற்றுமுன்தினம் தங்கம் விலையானது அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950-க்கும் தங்கம் சவரனுக்கு ரூ.1200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600-க்கு விற்பனையாகிறது. பின்னர் மாலையில் மேலும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்தது. அதன்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,11,200-க்கும், ஒரு கிராம் ரூ13,900-க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் ஒரே நாளில் தங்கம் விலை, காலையில் ரூ.1,200 மற்றும் மாலையில் ரூ.400 என மொத்தம் ரூ.1,600 சரிந்தது.
இந்நிலையில் சென்னையில் நேற்று காலை தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனையானது. மாலையில் கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,100-க்கும், சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து ரூ.1,12,800-க்கு விற்பனையானது. சென்னையில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ 13,920-க்கும் ஒரு சவரன் ரூ.1,11,360க்கு விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம் (Silver):
சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கு விற்பனையான நிலையில் இன்றும் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.260 க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 2,60,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
: கோவை, நீலகிரி உட்பட 6 மாவட்டத்துக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. சூறாவளி காற்று வீசும்.. வானிலை மையம் தகவல்
தங்கம் விலை உயர்வுக்கு என்ன காரணம்?
உலக சந்தையில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழ்நிலையின் காரணமாக, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை அதிகம் நாடி வருகின்றனர். இதன் விளைவாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. உலகளவில் மிக மதிப்புமிக்க உலோகங்களில் ஒன்றாக திகழும் தங்கத்தை, தனிநபர் முதலீட்டாளர்கள் மட்டுமின்றி இந்திய ரிசர்வ் வங்கி போல பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் பெருமளவில் வாங்கிக் குவித்து வருகின்றன.
பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களது வெளிநாட்டு நாணய கையிருப்பை வலுப்படுத்தும் நோக்கில் தங்க முதலீட்டில் அதிக கவனம் செலுத்தி வருவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் கடந்த டிசம்பர் 15ஆம் தேதியன்று, வரலாற்ற முதல் முறையாக சவரனுக்கு ₹1,00,000 என்ற முக்கிய மைல்கல்லை தங்கம் விலை எட்டியது.
:இ- சிகரெட் சர்ச்சை.. ரியான் பராக்-க்கு ஃபைன் போட்ட பிசிசிஐ..!
ஜனவரி மாதம் முழுவதும் தங்கத்தின் விலை தினந்தோறும் புதிய வரலாற்று உச்சங்களை தொட்டு, சவரன் ஒன்றரை லட்ச ரூபாயை நெருங்கும் அளவுக்கு உயர்ந்தது. அதே நேரத்தில் வெள்ளி விலையும் கடுமையாக உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ₹4.25 லட்சம் வரை சென்றது. இதன் பிறகு சற்றே தங்கம், வெள்ளியின் விலைகள் குறைந்தன.

