Dailyhunt
Hanuman Jayanthi 2026: தெலுங்கு அனுமன் ஜெயந்தி என்றால் என்ன, எப்போது வருகிறது?

Hanuman Jayanthi 2026: தெலுங்கு அனுமன் ஜெயந்தி என்றால் என்ன, எப்போது வருகிறது?

Telugu Hanuman Jayanthi 2026 Date: பஞ்சாங்கம் மற்றும் இந்துக்களின் நாட்காட்டியின் படி ஒவ்வொரு மாதமும் சதவிதமான விசேஷங்கள் முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகைகள் வரும்.

புராணங்கள் மற்றும் ஆன்மீக நூல்களின் அடிப்படையில் தெய்வங்கள் அவதரித்த நாட்கள் விசேஷமாக கொண்டாடப்படும். அந்த வகையில் சிரஞ்சீவி மற்றும் காலம் உள்ளவரை காக்கும் கடவுளாக இருக்கும் ஆஞ்சநேயர் அவதரித்த நாள் ஒரு ஆண்டில் வெவ்வேறு காலகட்டத்தில் கொண்டாடப்படுகிறது. 2026 ஆஞ்சநேயர் ஜெயந்தி, அதாவது அனுமனின் பிறந்தநாள், இந்தியாவின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலகட்டத்தில் கொண்டாடப்படுகிறது. 2026 அனுமன் ஜெயந்தி, தெலுங்கு அனுமன் ஜெயந்தியாக மே மாதம் கொண்டாடப்படுகிறது. இது பற்றிய முழு விவரங்கள் இங்கே.

அக்னி நட்சத்திரம் நாட்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?

41 நாட்களுக்குக் கொண்டாடப்படும் அனுமன் ஜெயந்தி
மாநில வாரியாக குறிப்பிட்ட மொழிகள் மற்றும் சமூகங்கள் வசிக்கும் பகுதிகளில் புத்தாண்டு அல்லது வருடப்பிறப்பு வேறுபடுவது போலவே அனுமன் ஜெயந்தி கொண்டாட்டமும் ஒவ்வொரு இடத்திற்கும் வேறுபடுகிறது. வட மாநிலங்களில், அனுமன் ஜெயந்தி சித்திரை மாத பௌர்ணமி அன்று கொண்டாடப்படும். தமிழ்நாட்டில், அனுமன் ஜெயந்தி, மார்கழி மாதத்தில் மூல நட்சத்திரம் வரும் நாளில் மார்கழி அமாவாசை அன்று கொண்டாடப்படும். இதேபோல ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில், சில சமூகங்களில், பங்குனி மாதப் பௌர்ணமி அல்லது சைத்ரா பௌர்ணமி அன்று தொடங்கி, 41 நாட்கள் விழாவாக கொண்டாடி, அனுமன் ஜெயந்தி அன்று முடிப்பார்கள்.

ஆஞ்சநேயர் அவதரித்தது பற்றி பல கதைகள் உள்ளன. ஆந்திரா, தெலுங்கானா அல்லது தெலுங்கு மொழி பேசும் சமூகத்தில், அஞ்சனை மைந்தன் பிறந்த நாள் ஜியேஷ்ட மாதத்தின் கிருஷ்ண பக்ஷத்தின் (தேய்பிறை) பத்தாம் நாளில் கொண்டாடப்படுகிறது. அதே போல, முதல் முதலாக இந்த நாளில் தான் அனுமன் ஸ்ரீராமரை சந்தித்தார் என்பதால் இந்த நாள் அவதரித்த நாளை விட சிறப்பானதாகக் கொண்டாடப்படுகிறது.

அனுமன் ஜெயந்தி 2026 தேதி
(when is hanuman jayanthi in 2026)
வைகாசி மாதத்தில் வரும் வளர்பிறை தசமிகு என்று தெலுங்கு அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படும். 2026 அனுமன் ஜெயந்தி ஆந்திர பிரதேசம் தெலுங்கானா மற்றும் இதர தெலுங்கு மக்கள் வாழும் இடங்களில் மே 12 அன்று கொண்டாடப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அன்று வரும் அனுமன் ஜெயந்தி மிக மிக விசேஷமானது என்பது குறிப்பிடத்தக்கது.

அனுமன் ஜெயந்தி 2026 தேதி மற்றும் நேரம்
(Telugu Anjaneyar Jayanti 2026)
வைகாசி மாதத்தில் தசமி திதி,

  • மே11 மாலை 3:25 மணிக்கு துவங்குகிறது.
  • மே 12 பிற்பகல் 2:52 மணி வரை நீடிக்கிறது.

சூரியன் உதிக்கும் நாளில் இருக்கும் திதியின் அடிப்படையில் மே 12 செவ்வாய்க்கிழமை அன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
ஏப்ரல் 2 2026 வந்த பௌர்ணமி அன்று தொடங்கிய 41 நாள் விரதம் மற்றும் அனுமன் ஜெயந்தி திருவிழா, மே 12ஆம் தேதி நிறைவடையும்.

திருப்பதியில் அனுமன் ஜெயந்தி விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் திருப்பதியில் அனுமன் ஜெயந்தி மிக விமரிசையாக, அஞ்சனாத்திரி ஆகாச கங்கை கோவிலிலும், திருமலையில் இருக்கும் ஜப்பள்ளி தீர்த்தத்திலும் கொண்டாடப்படும்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi