Dailyhunt
Karthigai Deepam Wishes in Tamil: கார்த்திகை தீபத் திருநாளுக்கு பகிரக்கூடிய அழகிய வாழ்த்து செய்திகள்...

Karthigai Deepam Wishes in Tamil: கார்த்திகை தீபத் திருநாளுக்கு பகிரக்கூடிய அழகிய வாழ்த்து செய்திகள்...

2025 ஆம் ஆண்டின் கடைசி பண்டிகையாக கார்த்திகை தீபம் வருகிறது. அண்ணாமலையார் ஜோதி ரூபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த நாள்தான் கார்த்திகை தீபமாக கொண்டாடப்படுகிறது.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று மாலை 6 மணி அளவில் மகாதீபம் மலை மீது ஏற்றப்படும். டிசம்பர் 3 புதன்கிழமை அன்று 2025 திருக்கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இந்த கார்த்திகை திருநாளில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் நண்பர்களுக்கும் அழகிய வாழ்த்து செய்திகளையும் மேற்கோள்களையும் பகிருங்கள்.

காத்திகை தீபம் 2025 வாழ்த்து செய்திகள்: 2025 Karthigai Deepam Festival Wishes in Tamil
உங்கள் வாழ்வில் இருள் நீங்கி, ஒளி பிறக்க, இந்த கார்த்திகை தீபத் திருநாளில் இறைவனை வேண்டுகிறேன்.

திருவண்ணாமலை ஜோதி போல, உங்கள் வாழ்வில் அருள் ஜோதி எப்போதும் பிரகாசிக்கட்டும். இனிய கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!

அக இருள் நீங்கி, ஞான ஒளி பரவட்டும். இந்தச் சுடர் போல, உங்கள் எண்ணங்கள் என்றும் உயர்வாக இருக்கட்டும்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்.

மங்களங்கள் பொங்க, மகிழ்ச்சி ஓங்க, வீட்டிலும் மனதிலும் ஒளி நிரம்ப, கார்த்திகை தீபத் திருநாளைக் கொண்டாடுவோம்.

அன்பால் ஏற்றப்படும் ஒவ்வொரு சுடரிலும், புதிய நம்பிக்கையின் ஒளி பிறக்கட்டும்! அனைவருக்கும் கார்த்திகை தீபத்தின் நல்வாழ்த்துக்கள்.

அனைத்து வளங்களையும் பெற்று, சந்தோஷமாக வாழ என் மனமார்ந்த கார்த்திகை தீப வாழ்த்துக்கள்!

தீபங்கள் போல உங்கள் கனவுகள் அனைத்தும் பிரகாசிக்கட்டும்! இனிய கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்!

வீட்டில் ஏற்றப்படும் ஒவ்வொரு தீபமும், உங்கள் குடும்பத்தில் ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் கொண்டு வரட்டும். கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்!

ஒளியின் திருவிழா உங்கள் வாழ்க்கையில் அமைதியையும், சகல சௌபாக்கியங்களையும் கொடுக்கட்டும்.

இந்தக் கார்த்திகை மாதம், உங்கள் மனதின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றும் நல்ல வாய்ப்புகளைக் கொண்டு வரட்டும்.

அன்பு என்னும் தீபத்தால், பாசம் என்ற ஒளி உலகம் முழுவதும் பரவட்டும். இனிய காத்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!

அக இருள் அகல, ஆனந்த ஒளி நிறைய, அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

தீமையின் இருள் விலகி, நன்மையின் பேரொளி வீசட்டும். மங்களகரமான கார்த்திகை தீபம்!

காத்திகை தீபம் 2025 மேற்கோள்கள்: 2025 Karthigai Deepam Festival Quotes in Tamil
அன்பு உறவுகளுக்கு...
ஒளியை ஏற்றி, உள்ளொளியை வரவேற்போம்!
துன்பங்கள் நீங்கி, புது இன்பங்கள் மலரட்டும்!
இம்மண்ணுலகில் மகிழ்ச்சி மிளிரட்டும்!
தீபத் திருநாள் காணும் உறவுகள் அனைவருக்கும்,
மனம் நிறைந்த கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்!
*****

கார்த்திகை தீபம்
உங்கள் வாழ்வில் உள்ள சோதனைகள் அனைத்தையும் நீக்கி,
புதிய நம்பிக்கையையும், நிலையான செல்வத்தையும் கொண்டு வரட்டும்.
இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!
****

அணையா தீபத்தின் சுடர் போல,
உங்கள் வாழ்வில் ஆனந்தம் என்றும் நிலையாய் பிரகாசிக்கட்டும்!
இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
****

அன்பு எனும் தீபம் ஏந்தி
உங்கள் இதயங்களில்,
நம்பிக்கை ஒளி என்றும் நிரந்தரமாய் ஒளிரட்டும்!
கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
***

தொழிலில் மேன்மை,
வீட்டில் ஒற்றுமை,
மனதில் அமைதி மலரட்டும்!
இனிய கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்!
****

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi