Dailyhunt
காதல் திருமணம்.. திருட்டு பட்டம்.. மகளை ஆணவக்கொலை செய்த தந்தை கைது

காதல் திருமணம்.. திருட்டு பட்டம்.. மகளை ஆணவக்கொலை செய்த தந்தை கைது

ந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சீனு - கங்கா தம்பதி. இவர்களது மகள் சவுடேஸ்வரி. அதேப்பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் சவுடேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்தப்பழக்கம் நாளடையில் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிப் பழகி வந்தனர். இந்த விஷயம் சீனுவின் காதுகளுக்கு எட்ட நாகராஜ் ஏழை மற்றும் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சவுடேஸ்வரி நாகராஜை தான் திருமணம் செய்துக்கொள்வேன் என பிடிவாதமாக இருந்துள்ளார். இந்நிலையில் சவுடேஸ்வரிக்கு வரன் பார்த்து பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்து நிச்சயதார்த்தம் எல்லாம் முடிந்துவிட்டது. திருமணத்துக்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்தது.

இந்நிலையில் திருமணத்துக்கு 2 நாட்களுக்கு முன்பு சவுடேஸ்வரி வீட்டை விட்டு காதலனுடன் வெளியேறினார். ஊரார் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக கருதிய சீனு தனது மகள் மீது காவல்நிலையத்தில் பொய்யான புகார் ஒன்றை அளித்தார். தனது மகள் வீட்டில் இருந்த 25 சவரன் நகை மற்றும் பணத்துடன் மாயமாகிவிட்டார் எனப் புகார் அளித்தார். இதற்கிடையில் சவுடேஸ்வரி - நாகராஜ் இருவரும் திருமணம் செய்துக்கொண்ட தகவல் சீனு காதுகளுக்கு எட்டியது. சீனி தனது உறவினர்களுடன் வந்து காவல்நிலையம் வந்து மகளை கண்டுபிடித்து தரக்கோரி தர்ணா போராட்டம் நடத்தியுள்ளார். இதனையடுத்து புதுமணத் தம்பதியை காவல்நிலையம் அழைத்து வந்தனர்.

: நண்பனின் காதலி மீது மோகம்.. வடமாநில தொழிலாளி கொலையில் பகீர் தகவல்... 2 பேர் கைது

அப்போது ஊர் தலைவர்கள் சமாதனம் பேச முயன்றனர். காவல்நிலையத்தில் அந்தப்பெண் நான் மேஜர் என்னுடைய விருப்பப்படி தான் இந்த திருமணம் நடந்தது. என்னை யாரும் தடுக்க முடியாது. நான் வீட்டில் இருந்து பணம் நகை எதுவும் எடுத்து வரவில்லை. நான் அணிந்திருந்த கம்மலை கூட கழற்றிவைத்து விட்டு கட்டிய புடவையுடன் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வந்தேன் என்றார். அவரது தந்தை இதை ஏற்றுக்கொள்ளவில்லை. போலீசார் சமாதானம் பேசி 5 நாட்கள் தாய் வீட்டில் இருந்துவிட்டு பின்னர் கணவருடன் செல்லுங்கள் எனக்கூறி சீனுவுடன் அவரை மகளை அனுப்பி வைத்துள்ளனர். இதன்படி சவுடேஸ்வரி தந் தையுடன் சென்றார். இதற்கிடையே கடந்த மார்ச் 18-ம் தேதி சவுடேஸ்வரி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அந்தப்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குடும்பத்தினரிடம் விசாரிக்கையில் அவர் தற்கொலை செய்துக்கொண்டதாகவும் மேலும் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்தப்பெண் தற்கொலை செய்துக்கொள்ளவில்லை அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரியவந்தது.

இதனையடுத்து சீனுவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.அப்போது அவர் தனது மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், " மகள் வேறு சமூக இளைஞரை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட ஆத்திரத்தில் இருந்துள்ளனர். வீட்டில் இருந்த மனைவி மற்றும் மகனை வெளியில் அனுப்பிவைத்துவிட்டு உறவினர் ஒருவரின் உதவியுடன் மகளை தலையணையால் அமுக்கி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது" என்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi