Kumbham | Aani Month Rasipalan 2026: ஆனி மாதம் நடக்கும் கிரகங்களின் பெயர்ச்சியின் அடிப்படையில் கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், உத்தியோகம் மற்றும் தொழிலில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும், எந்தெந்த விஷயங்கள் சாதகமாக இருக்கும், எதில் கவனமாக இருக்க வேண்டும் என்பது பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
ஆனி மாத ராசிபலன் 2026 - கும்பம் ராசிக்கு கிரக நிலைகள் சாதகமா பாதகமா?
- மீனம் ராசியில் சனி பெயர்ச்சி - வருமானம் மற்றும் சேமிப்பில் அவசரம் காட்டக் கூடாது
- ரிஷப ராசியில் செவ்வாய் பெயர்ச்சி - வீடு, சொத்து மற்றும் குடும்ப விஷயங்களில் கவனம் தேவை
- மிதுன ராசியில் சூரியன் பெயர்ச்சி - முயற்சிகளில் வெற்றி
- கடக ராசியில் குரு பெயர்ச்சி - வேலை மற்றும் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்
- சுக்கிரன் பெயர்ச்சி - காதல் கைகூடும் மற்றும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்
- புதன் பெயர்ச்சி - தொழில், கல்வி மற்றும் வியாபாரத்தில் சாதகமான மாற்றங்கள் கிடைக்கும்
- கும்ப ராசியில் ராகு பெயர்ச்சி - தன்னம்பிக்கை மற்றும் புதிய முயற்சிகளில் வளர்ச்சி
- சிம்ம ராசியில் கேது பெயர்ச்சி - உறவுகள் மற்றும் கூட்டாண்மைகளில் நிதானம் தேவை
Aani Month Rasipalan Dhanusu - தனுசு ஆனி மாத ராசிபலன் 2026
Kumbham | ஆனி மாத ராசி பலன் 2026 - சாதகமான விஷயங்கள்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஆனி மாதம் புதிய வாய்ப்புகள் மற்றும் முன்னேற்றங்களை வழங்கக்கூடிய காலமாக அமைகிறது. ராகு ராசியில் சஞ்சரிப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய திட்டங்கள், புதிய முயற்சிகள் மற்றும் தொழில் தொடர்பான முக்கிய முடிவுகளில் சாதகமான முன்னேற்றம் காணப்படும்.
வேலை தொடர்பான சிக்கல்கள் குறையக்கூடும். போட்டித் தேர்வுகள், அரசு வேலை முயற்சிகள் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கலாம். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
, கல்வி மற்றும் படைப்பாற்றல் சார்ந்த விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்பு உள்ளது. குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கலாம்.
வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கக்கூடும். வருமானத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு, நிதிநிலை சீரடையும்.
Kumbham | ஆனி மாத ராசி பலன் 2026 - கவனமாக இருக்க வேண்டியவை
குடும்பத்தில் சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வீடு, வாகனம் அல்லது சொத்து தொடர்பான முடிவுகளை அவசரமாக எடுக்க வேண்டாம். குடும்ப உறுப்பினர்களுடன் பொறுமையாக பேசுவது நல்லது.
கூட்டாண்மை தொழில்கள் மற்றும் திருமண உறவுகளில் நிதானம் அவசியம். மற்றவர்களின் கருத்துக்களையும் மதித்து செயல்பட வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
பண விஷயங்களில் திட்டமிடல் அவசியம். வருமானம் இருந்தாலும் சேமிப்பதில் சிரமம் இருக்கலாம். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது.
உடல்நலத்தைப் பொறுத்தவரை கண் எரிச்சல், தலைவலி, தூக்கமின்மை அல்லது மன அழுத்தம் போன்ற சிறிய பிரச்சினைகள் ஏற்படலாம். ஆரோக்கியமான உணவு மற்றும் போதுமான ஓய்வை கடைப்பிடிப்பது நல்லது.
Disclaimer: இந்தப்பதிவு ஆன்மீக மற்றும் ஜோதிட நம்பிக்கைகளின் படிஎழுதப்பட்டதாகும். இதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கு அறிவியல் தொடர்பான விளக்கம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

