Elarai Sani Peyarchi for Kumbham: கும்ப ராசிக்காரர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்த சனிப்பெயர்ச்சிகள் ஏழரை சனியின் காலகட்டம் நடந்து வருகிறது.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2027 சனி பெயர்ச்சி நடக்கும் வரை ஏழரை சனி நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் ராசியின் அதிபதியாக இருந்தால் கூட பலவகையில் நெருக்கடிகளையும் சங்கடங்களையும் ஏற்படுத்தி வருகிறார். ஏழரை சனி முடிவதற்கு பல மாதங்கள் இருப்பதால் எந்த வகையில் ஏழரைச் சனி காலகட்டம் கும்ப ராசிக்கு நன்மைகள் செய்யும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
கும்ப ராசிக்கு சனி பெயர்ச்சி விவரங்கள்
- நடப்பு சனி பெயர்ச்சி - பாத சனி
- ஏழரை சனியின் கடைசி 2.5 வருடங்கள்
- ஏழரை சனி முடியும் காலம் - ஜூன் 2027

அடுத்து வரும் சில மாதங்களுக்கு ஏழரை சனி காலம் நன்மைகளைத் தருமா?
(elarai sani peyarchi for kumbham)
கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலத்தின், கடைசி கட்டமான பாத சனியில் நல்லது நடக்குமா, என்று பலருக்கும் எதிர்பார்ப்பு இருக்கும்.
- முதல் சுற்று ஏழரை சனி: மங்கு சனி காலம் பெரிய பாதிப்புகள் இருக்காது.
- இரண்டாம் சுற்று ஏழரை சனி: பொங்கு சனி காலம், திருமணம் நடக்கும், வருமானம் வேலையில் நிலைத்தன்மை முன்னேற்றம் ஏற்படும்
மே மாதம் செவ்வாய் பெயர்ச்சி யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?
கும்ப ராசிக்காரர்களுக்கு சனிபகவான் ராசியின் அதிபதியாக இருந்தால் கூட 12 ஆம் வீடு என்று சொல்லப்படும் விரய ஸ்தானத்தின் அதிபதியாகவும் இருப்பதால், எந்த அளவுக்கு வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கிறதோ அதே அளவுக்கு செலவு அலைச்சல் தூக்கமின்மை ஆகியவையும் ஏற்படும்.வேலை சம்மந்தப்பட்ட விஷயங்களில் ஏழரை சனி காலத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு பெரும்பாலானவர்களுக்கு நல்ல வேலை கிடைத்து நிதானமான ஆனால் சீரான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும். இருப்பினும் அதே அளவுக்கு மருத்துவ செலவு திருமணத்தில் சிக்கல், குடும்பத்தில் வாக்குவாதங்கள் போன்றவையும் ஏற்பட்டிருக்கும்.
நன்மைகள்
- ஒழுக்கம் & கட்டுப்பாடு அதிகரிப்பு - வாழ்க்கை தெளிவாகும்
- நிலையான முன்னேற்றம் - மெதுவாக ஆனால் உறுதியான வளர்ச்சி
- பண விஷயங்களில் விழிப்புணர்வு - வீண் செலவுகள் குறைவு
- மன வலிமை - சவால்களை சமாளிக்கும் திறன் உயரும்
சவால்கள்
- வேலை/தொழிலில் அழுத்தம் மற்றும் தாமதம்
- உறவுகளில் சோதனை - புரிதல் தேவை
- மன அழுத்தம் - தனிமை உணர்வு
- பண விஷயங்களில் சிறிய தடைகள்
Kumbham Rasi: ஜூன் மாதத்தில் நடக்கவிருக்கும் வக்கிர சனி காலத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியான நன்மைகளை எதிர்பார்க்கலாம். குழப்பங்கள் விலகி, திடீர் யோகம் திடீர் பணவரவு அதிர்ஷ்டம் ஆகியவை உண்டாகும்.சனிப்பெயர்ச்சியால் பெரிய அளவுக்கு பாதிப்புகள் எதுவும் இல்லை என்று சொன்னால் கூட வீணான பேச்சு வாக்குவாதங்கள் ஆகியவை குடும்பத்தில் சிக்கலை ஏற்படுத்தும். எனவே, எந்த விவகாரமாக இருந்தாலும் அதில் வீணாக தலையிடுவது நீங்களாகவே கருத்து சொல்வது ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.அது மட்டும் இல்லாமல் நவம்பர் மாதம் வரை குரு பெயர்ச்சி மற்றும் ராகு கேது பெயர்ச்சி ஆகியவை சாதகமற்ற நிலையில் இருப்பதால், எல்லா விஷயங்களுமே அனுசரித்து செல்ல வேண்டிய காலமாக இருக்கும்.
Disclaimer: இந்தப்பதிவு ஆன்மீக மற்றும் ஜோதிட நம்பிக்கைகளின் படிஎழுதப்பட்டதாகும். இதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கு அறிவியல் தொடர்பான விளக்கம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

