Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Kushboo Daughter Wedding: குஷ்புவின் வருங்கால மருமகன் ஷ்ரவன் சீனிவாசன்...  போட்டோவை வைத்து ட்விட்டரில் நடக்கும் களேபரம்! குஷ்பு கண்ணில் படும் வர ஷேர் செய்யும் நெட்டிசன்கள்!

Kushboo Daughter Wedding: குஷ்புவின் வருங்கால மருமகன் ஷ்ரவன் சீனிவாசன்... போட்டோவை வைத்து ட்விட்டரில் நடக்கும் களேபரம்! குஷ்பு கண்ணில் படும் வர ஷேர் செய்யும் நெட்டிசன்கள்!

Kushboo Daughter Wedding: ரசிகர்களால் கோயில் கட்டி கும்பிடும் அளவிற்கு 90களில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் குஷ்பு.

நடிகை, துணை நடிகை, அம்மா, அண்ணி, வில்லி என தமிழ் சினிமாவி இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனலாம். மும்பையை சேர்ந்த குஷ்பு, தனது 14 வயதில் சினிமாவில் நுழைந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என எல்லா மொழிகளிலும் நடித்துள்ளார். உச்ச நடிகர்களுடனும் ஜோடி போட்டிருக்கிறார். பின்னர் இயக்குனர் சுந்த.சியை கரம் பிடித்து, தமிழ்நாட்டு மருமகள் ஆனார். இந்த ஜோடிக்கு 2 பெண் பிள்ளைகள் பிறந்தனர்.

சினிமா, சின்னத்திரைக்கு பிறகு நேரடியாக அரசியல் பக்கம் வந்தார். 2010 ஆம் ஆண்டு மே மாதம், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகிய குஷ்பூ, அதே ஆண்டு நவம்பர் மாதம் தேசிய காங்கிரஸில் இணைந்தார்.அதன் பிறகு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். நரேந்திர மோடியின் கொள்கைகளை விமர்சித்து வந்த குஷ்புவின் ட்விட்டர் பதிவுகள் அவ்வப்போது பேசுபொருளானது.

அரசியலுக்கு வந்த பிறகு ஏகப்பட்ட சர்ச்சைகளை குஷ்பு சந்தித்தார். அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஒருபக்கம் சினிமா, இன்னொரு பக்கம் அரசியல், ஃபேமலி என மல்டி டாஸ்க் செய்து, பெண்களுக்கு ரோல் மாடலாக திகழ்ந்தார். சமீபத்தில் பயங்கரமாக வெயிட் லாஸ் செய்த குஷ்பு, இப்போது ஸ்லிம் தோற்றத்தில் வலம் வருகிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு பின்னர் பாஜகவில் இணைந்தது பேசும் பொருளானது. ஆரம்பத்தில்ர பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்தவர், பின்னர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இப்போது குஷ்பு பாஜக கட்சியின் தமிழ்நாடு மாநில துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.குஷ்புவின் இளைய மகள் சினிமாவில் எண்ட்ரி கொடுக்கிறார். அவரின் முதல் படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

மூத்த மகள் அவந்திகா கூடிய விரைவில் திருமண உறவில் இணையவுள்ளார். அவருக்கு ஷ்ரவன் சீனிவாசன் என்பவருடன் திருமணம் நடைப்பெறவுள்ளது. இதுக்குறித்து அறிவிப்பை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மகள், கணவர், வருங்கால மருமகனுடன் சென்று திருமண அழைப்பிதழை வழங்கி பிரதமர் மோடியை சந்தித்த தருணத்தை போட்டோவுடன் ட்விட்டரில் ஷேர் செய்தார். அதன் பின்பு எல்லோரின் கவனமும் குஷ்பு வீட்டு மாப்பிள்ளை ஷ்வரன் மீத் சென்றது. உடனே நெட்டிசன்கள் ஷ்வரன் சீனிவாசன் குறித்து ஆராய்ச்சி செய்ய தொடங்கினர். அவர் யார்? என்ற விவரமும் இதுவரை வெளியாகவில்லை. எந்த துறையை சார்ந்தவர், அரசியல் குடும்பமா? சினிமா பின்புலமா அல்லது சுந்தர் சி உறவினர் மகனா? அவந்திகாவின் நண்பரா என எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே, ட்விட்டரில் நெட்டிசன்கள் ஷ்வரன் சீனிவாசனை போட்டோவை பகிர்ந்து, அவரின் தோற்றம் குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த பதிவுகள் ட்விட்டரில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ இங்கே


நெட்டிசன்கள், குஷ்பு மருமகனுக்கு நடிகர் நாகர்ஜூனா முக ஜாடை இருப்பதாகவும், நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா முகம் இருப்பதாகவும், இன்னும் சிலர் கிரேட் காளி, தோனி என தனக்கு தோன்றும் பிரபலங்களை எல்லாம் வைத்து கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் உண்மையில் ஷ்வரன் சீனிவாசன் யார்? என்பது யாருக்குமே தெரியவில்லை.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi