Dailyhunt
LPG கொடுத்த அதிர்ச்சி முடியவில்லை. அதற்குள் சமையல் எண்ணெய் விலை ஏற்றம் - ஈரான் போரின் தாக்கம்!

LPG கொடுத்த அதிர்ச்சி முடியவில்லை. அதற்குள் சமையல் எண்ணெய் விலை ஏற்றம் - ஈரான் போரின் தாக்கம்!

த்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஈரானில் நிலவும் போர் சூழல் காரணமாக, கடந்த சில வாரங்களாக எல்பிஜி சிலிண்டர்களின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டு நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.

வணிக சிலிண்டர்களுக்கான பற்றாக்குறையால் கடுமையான பாதிப்பும், சிலிண்டர்களின் விலை ஏற்றமும், பலதரப்பட்ட மக்களை பாதித்தது. ஈரான் போரின் தாக்கம் இன்னும் அதிகரித்து தற்பொழுது நம் வீட்டு சமையலறையை பாதிக்கும் அளவுக்கு வந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே மோதல் மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக, நம் வீட்டு கிச்சனில் சமையல் எண்ணெய் பயன்பாட்டை பாதித்துள்ளது. முதலில் வினியோகம் தடைப்பட்டது, அடுத்ததாக லாஜிஸ்டிக் செலவுகள் அதிகரித்ததால் பொருட்களின் விலை உயர்ந்தது. இவை இரண்டுமே சூரியகாந்தி எண்ணையின் பயன்பாட்டை சமையலறையில் கிட்டதட்ட 10% வரை குறையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணெய் விநியோகத்தில் அதிகரித்துள்ள செலவுகள்
இந்தியாவிற்குத் தேவையான சூரியகாந்தி எண்ணெயில் பெரும் பகுதி உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது நிலவும் போர்ச் சூழலால், நீண்ட கடல் பயணத்தில், கப்பல்கள் பாதுகாப்புக் கருதி 'கேப் ஆஃப் குட் ஹோப்' (Cape of Good Hope) வழியாகச் சுற்றுப்பாதையில் வருவதால் பயண தூரமும் நேரமும் அதிகரித்துள்ளன. அதே போல, காப்பீட்டுச் செலவுக்கும் போர் அபாயம் உள்ள பகுதிகள் வழியாக வருவதால், கப்பல்களுக்கான இன்ஷூரன்ஸ் பிரீமியமும் (Insurance Premium) உயர்ந்துள்ளது. இது ஒட்டுமொத்த இறக்குமதிச் செலவை அதிகரித்துள்ளது.

பணவீக்கம், போர் சூழல் அன்றாட வாழ்க்கையை எப்படி எல்லாம் பாதிக்கும்?

CRISIL ஆய்வு
கிரிசில் ரேட்டிங்ஸ் நிறுவனம் தங்களால் தரமதிப்பீடு செய்யப்பட்ட 9 சூரியகாந்தி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களை ஆய்வு செய்து வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, ரூ.36,000 கோடி மதிப்பிலான இந்த தொழில்துறையின் மொத்த வருவாயில், சுமார் 70% பங்கினை இந்த நிறுவனங்கள் மட்டுமே வழங்குகின்றன.

  • எண்ணெய் விலை உயர்வு: மார்ச் 1-ம் தேதி லிட்டருக்கு ₹130 ஆக இருந்த சூரியகாந்தி எண்ணெய், மார்ச் 31-ம் தேதி ₹185 ஆக உயர்ந்துள்ளது, சுமார் 30% அதிகரித்துள்ளது.
  • பாமாயில் எண்ணையும் பாதிப்பு: ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் பாமாயில் எண்ணையின் விலையும் லிட்டருக்கு ₹117 இல் இருந்து ₹160 ஆக அதிகரித்துள்ளது.
  • தேவை குறைவு: அதிக விலை காரணமாக, நடப்பு நிதியாண்டில் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெயின் விற்பனை அளவு 10% வரை குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மலிவு விலை எண்ணெய் வகைகளை தேடும் நுகர்வோர்
இந்த காரணங்களால், அரிசி தவிடு எண்ணெய் (Rice Bran Oil) மற்றும் சோயாபீன் எண்ணெய் போன்ற விலை குறைவான மாற்று எண்ணெய் வகைகளை மக்கள் தேடி வருகிறார்கள். சூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 10 சதவீதம் அளவுக்கு குறைந்தால் கூட, சூரியகாந்தி எண்ணெய் சுத்திகரிப்பாளர்களுக்கு கையில் இருக்கும் சரக்கு நல்ல லாபத்தை கொடுக்கும் எனவே வருமானத்தில் பற்றாக்குறை ஏற்படாது என்பதும் குறிப்பிடத்தக்க. இருப்பினும், சூரியகாந்தி எண்ணெய் சுத்திகரிப்பாளர்களின் லாபம் நிலையாக இருக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது, ஏனெனில் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட குறைந்த விலை சரக்குகளிலிருந்து சரக்கு லாபம் பெரிய அளவில் வீழ்ச்சியடைவதால் ஏற்படும் எதிர்மறையான செயல்பாட்டு மேம்பாட்டை ஈடு செய்கிறது. இவை சூரியகாந்தி எண்ணெயை விட லிட்டருக்கு ₹10 முதல் ₹20 வரை குறைவாகக் கிடைக்கின்றன.

இண்டக்ஷன், கேஸ் சிலிண்டரை விட மலிவானதா அல்லது விலை அதிகமா? ஒரு மாதத்திற்கு மின்சாரக் கட்டணம் எவ்வளவு வரும்?

சூரியகாந்தி எண்ணெயின் பயன்பாடு அல்லது விற்பனை அளவு குறைந்தாலும், சுத்திகரிப்பு நிறுவனங்களின் லாபத்தில் பெரிய பாதிப்பு இருக்காது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காரணம், இறுதி நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் விலையில் சுமார் 10-15 நாட்கள் தாமதத்துடன் அனுப்பும் நடைமுறை இவர்களுக்கு உள்ளது. மேலும், விலை சரிவு போன்ற அபாயங்களை சமாளிக்க, சுத்திகரிப்பாளர்கள் வலுவான ஹெட்ஜிங் (hedging) கொள்கைகளை பின்பற்றி வருகின்றனர். இதனால், சந்தை மாற்றங்களால் ஏற்படும் இழப்புகளை குறைத்து, லாபத்தை நிலையாக வைத்திருக்க முடிகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi