Mamata Banerjee Election Result : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றி இருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை போலவே மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறார் பாஜகவின் சுவைந்து அதிகாரி.
5 மாநில சட்டமன்றத் தேர்தல்
தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்குவங்கம், கேரளா மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் திருவிழா கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்த நிலையில் நேற்று (மே 4) 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்தது.
இதில் தமிழ்நாட்டில் பல்வேறு கருத்துக்கணிப்புகளும் திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் எனக் கூறிய நிலையில் அவை அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக திமுக, அதிமுகவை ஒரு சேர ஓரம் கட்டி 108 இடங்களில் வெற்றியை பதிவு செய்திருக்கிறது விஜயின் தமிழக வெற்றி கழகம். திரை துறையைப் போலவே அரசியலிலும் முத்திரை பதித்துள்ள விஜயின் தவெக 1.72 கோடி வாக்குகள் (34.92%) பெற்று மலைக்க வைத்துள்ளது.
மு.க.ஸ்டாலின் முதல் துரைமுருகன் வரை.. தோல்வியை தழுவிய திமுக அமைச்சர்கள்..
மு.க.ஸ்டாலின் & அமைச்சர்கள்
ஆட்சியை பறிகொடுத்த திமுகவுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்தது சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலினின் தோல்வி. தவெகவின் வி.எஸ் பாபுவிடம் சுமார் 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் தோல்வியை தழுவினார்.
இதே போல, காட்பாடியில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி ராஜா, கீதா ஜீவன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.ஆர். பெரிய கருப்பன், சு.முத்துசாமி, பி.மூர்த்தி, மா. சுப்ரமணியன், மு.பெ. சாமிநாதன், ஆர்.காந்தி, சா.மு.நாசர், தா.மோ. அன்பரசன் உள்ளிட்ட 15 அமைசச்ர்கள் தோல்வியை தழுவினர்.
விஜயின் சரித்திர வெற்றி
தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றியை பதிவு செய்ததுடன், முதலமைச்சரான ஸ்டாலினை அவரது சொந்த தொகுதியிலேயே தோல்வியடையச் செய்து தமிழக அரசியலில் மாபெரும் சரித்திரத்தை பதிவு செய்திருக்கிறார் விஜய்.
எம்ஜிஆரை மிஞ்சிய விஜய்.. 60 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை தவெக செய்த தரமான சம்பவம்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் போலவே இந்தியாவில் பலரும் உற்று நோக்கிய ஒரு தேர்தல் என்றால் அது மேற்கு வங்க மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் தான். இங்கு மூன்று முறை தொடர்ந்து ஆட்சி செய்து வரும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் - பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டது.
மேற்குவங்க தேர்தல் முடிவு (west bengal election result)
294 தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு வங்க மாநில தேர்தலில் பல்வேறு கருத்துக்கணிப்புகளும் பாஜகவின் வெற்றியை கோடிட்டு காட்டின. அந்த வகையில் நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து பாஜக வெற்றி முகத்தை நோக்கி பயணித்தது. அந்த வகையில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக வெற்றி பெற்று முதல் முறையாக மேற்கு வங்கத்தில் ஆட்சியை அமைக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயமாக இருப்பது திரிணாமுல் காங்கிரசின் கோட்டையாக கருதப்பட்ட பவானிபூர் தொகுதியில் முதலமைச்சரான மம்தா பானர்ஜியை தோல்வியடைச் செய்திருக்கிறார் பாஜகவின் சுவேந்து அதிகாரி.
மம்தாவை வீழ்த்திய சுவேந்து அதிகாரி..
அம்மாநில பாஜக தலைவராக இருக்கும் சுவேந்து அதிகாரி, ஏற்கனவே 2021 சட்டமன்றத் தேர்தலிலும் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை வீழ்த்தி இருந்தார். தற்போது பவானிபூர் தொகுதியில் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா பானர்ஜியை சுவேந்து அதிகாரி தோல்வியடையச் செய்திருப்பது மேற்குவங்க அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது தவிர விஜயை போலவே (பெரம்பூர் & திருச்சி கிழக்கு) நந்திகிராம் தொகுதியிலும் சுவேந்து அதிகாரி போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

