பல நூற்றாண்டுகளாக, மதுரை என்று சொன்னாலே, அதன் முதன் அடையாளமாகவும், மதுரையின் மையத்தில் பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் உலக பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன், மதுரை மீனாட்சி திருக்கோவில் தான் நினைவுக்கு வரும்!
ஆன்மீகம், வரலாறு, கலை, பண்பாட்டு ஆகியவற்றின் அடையாளமாக மீனாட்சி அம்மன் கோயில் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும், சித்திரை மாதம் நடைபெறும் சித்திரை திருவிழா, உலக புகழ் பெற்ற விழாவாகும். இதில் தமிழகம் மட்டுமல்லாது, அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சித்திரை திருவிழாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். உள்ளூர் வாசிகள் தங்கள் குழந்தைகளை மதுரை மீனாட்சியாக அலங்கரித்து கொண்டாடி மகிழ்வார்கள். 2026 மதுரை சித்திரை திருவிழா எப்போது தொடங்குகிறது, எந்த நாட்களில் என்னென்ன நிகழ்வு நடைபெறுகிறது உள்ளிட்ட முழு விவரம் இங்கே.
தமிழ் புத்தாண்டு 2026 - பராபவ ஆண்டு பற்றிய முக்கிய விவரங்கள்
முழு சித்திரை திருவிழா அட்டவணை
| நாள் | தேதி | கிழமை | வைபவம் |
| ---- | ஏப்ரல் 18, 2026 | சனிக்கிழமை | வாஸ்து சாந்தி பூஜை |
| நாள் 1 | ஏப்ரல் 19, 2026 | ஞாயிற்றுக்கிழமை | சித்திரை திருவிழா கொடியேற்றம், கற்பக விருட்சம், சிம்ம வாகனம் |
| நாள் 2 | ஏப்ரல் 20, 2026 | திங்கட்கிழமை | பூத வாகனம், அன்ன வாகனம் |
| நாள் 3 | ஏப்ரல் 21, 2026 | செவ்வாய்க்கிழமை | கைலாச பர்வதம், காமதேனு வாகனம் |
| நாள் 4 | ஏப்ரல் 22, 2026 | புதன்கிழமை | தங்க பல்லக்கு |
| நாள் 5 | ஏப்ரல் 23, 2026 | வியாழக்கிழமை | தங்க குதிரை வாகனம், வேடர் பாரி லீலை |
| நாள் 6 | ஏப்ரல் 24, 2026 | வெள்ளிக்கிழமை | தங்க ரிஷபம், வெள்ளி ரிஷபம் |
| நாள் 7 | ஏப்ரல் 25, 2026 | சனிக்கிழமை | நந்திகேஸ்வரர், யாளி வாகனம் |
| நாள் 8 | ஏப்ரல் 26, 2026 | ஞாயிற்றுக்கிழமை | மீனாட்சி பட்டாபிஷேகம், வெள்ளி சிம்ஹாசன உலா |
| நாள் 9 | ஏப்ரல் 27, 2026 | திங்கட்கிழமை | மீனாட்சி திக் விஜயம், இந்திர விமான உலா |
| நாள் 10 | ஏப்ரல் 28, 2026 | செவ்வாய்க்கிழமை | மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம், யானை வாகனம், புஷ்ப பல்லக்கு |
| நாள் 11 | ஏப்ரல் 29, 2026 | புதன்கிழமை | மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம், கள்ளழகர் தங்க பல்லக்கு புறப்பாடு |
| நாள் 12 | ஏப்ரல் 30, 2026 | வியாழக்கிழமை | கள்ளழகர் எதிர் சேவை |
| நாள் 13 | மே 01, 2026 | வெள்ளிக்கிழமை | கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளல் |
| நாள் 14 | மே 02, 2026 | சனிக்கிழமை | தசாவதாரம் திருக்கோலம் |
| நாள் 16 | மே 04, 2026 | திங்கட்கிழமை | புஷ்ப பல்லக்கில் கள்ளழகர் திருமாலிருஞ்சோலை புறப்பாடு |
| நாள் 17 | மே 05, 2026 | செவ்வாய்க்கிழமை | கள்ளழகர் திருமாலிருஞ்சோலை வந்து சேருதல் |
இதில், கொடியேற்றம், மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், மீனாட்சி திக் விஜயம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யனாம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், கள்ளழகர் எதிர் சேவை ஆகியவை முக்கிய நிகழ்வுகளாகும்.

