சித்திரை மாதம் என்றாலே, ஒரு பக்கம் விடுமுறை, கொளுத்தும் வெயில், கத்திரி நாட்கள் என்பது இருந்தாலும், மதுரையில் மீனாட்சியம்மன் திருக்கல்யாணமும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வும் நினைவுக்கு வரும்!
உலகப் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு ஆகியவை விசேஷமான நாட்களாகும். மதுரையில் நடக்கும் பல திருவிழாக்கள் மற்றும் உற்சவங்களில் சித்திரைத் திருவிழா தனிச்சிறப்பு வாய்ந்தது. 2026 சித்திரை திருவிழா எப்போது தொடங்கி முடியும் என்பது பற்றிய அட்டவணை, தொடங்கும் தேதி, முடியும் தேதி உள்ளிட்ட விவரங்கள் இங்கே.
பிரம்மாண்டமாக நடைபெறும் மதுரை சித்திரை திருவிழா 2026
மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக, உலகப் பிரசித்தி பெற்ற கோவிலான மீனாட்சி அம்மன் திருக்கோவிலில், வருடந்தோறும் நடைபெறும் சித்திரை திருவிழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. சித்திரை திருவிழா நடைபெறும் ஒரு மாதத்திற்கு முன்பே, எல்லா ஏற்பாடுகளும் களைகட்டும். மதுரைவாசிகள் மட்டுமில்லாமல், உலகம் முழுவதிலுமிருந்து இந்தத் திருவிழாவில் கலந்து கொள்வார்கள். திருவிழாவின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஆகியவை, விசேஷமான நிகழ்வுகளாகும். .
2026 சித்திரை திருவிழா அட்டவணை
- நாள் 1 - ஏப்ரல் 19, 2026 - சித்திரை திருவிழா கொடியேற்றம், கற்பக விருட்சம், சிம்ம வாகனம்
- நாள் 2 - ஏப்ரல் 20, 2026 - பூத வாகனம், அன்ன வாகனம்
- நாள் 3 - ஏப்ரல் 21, 2026 - கைலாச பர்வதம், காமதேனு வாகனம்
- நாள் 4 - ஏப்ரல் 22, 2026 - தங்க பல்லக்கு
- நாள் 5 - ஏப்ரல் 23, 2026 - தங்க குதிரை வாகனம், வேடர் பாரி லீலை
- நாள் 6 - ஏப்ரல் 24, 2026 - தங்க ரிஷபம், வெள்ளி ரிஷபம்
- நாள் 7 - ஏப்ரல் 25, 2026 - நந்திகேஸ்வரர், யாளி வாகனம்
- நாள் 8 - ஏப்ரல் 26, 2026 - மீனாட்சி பட்டாபிஷேகம், வெள்ளி சிம்ஹாசன உலா
- நாள் 9 - ஏப்ரல் 27, 2026 - மீனாட்சி திக் விஜயம், இந்திர விமான உலா
- நாள் 10 - ஏப்ரல் 28, 2026 - மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம், யானை வாகனம், புஷ்ப பல்லக்கு
- நாள் 11 - ஏப்ரல் 29, 2026 - மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம், கள்ளழகர் திருக்கோலத்தில் தங்க பல்லக்கு மதுரைக்கு புறப்பாடு
- நாள் 12 - ஏப்ரல் 30, 2026 - கள்ளழகர் எதிர் சேவை
- நாள் 13 - மே 01, 2026 - கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளல்
- நாள் 14 - மே 02, 2026 - தசாவதாரம் திருக்கோலம்
- நாள் 16 - மே 04, 2026 - புஷ்ப பல்லக்கில் கள்ளழகர் திருமாலிருஞ்சோலை புறப்பாடு
- நாள் 17 - மே 05, 2026 - கள்ளழகர் திருமாலிருஞ்சோலை வந்து சேருதல்
மதுரையில் ஆண்டு முழுவதும் பல உற்சவங்கள், திருவிழாக்கள் நடந்தாலும், அதிக நாட்கள் நடைபெறும் உற்சவம் மதுரை சித்திரை திருவிழாவாகும்.

