May 1 2026: தமிழில் முன்னணி தொலைக்காட்சியாக வலம் வ்ரும் ஜீ தமிழில் ப்ளாக் பஸ்டர் படங்கள் ஒளிப்பரப்பாகின்றன.
தமிழ் திரையுலகின் முன்னணி பொழுதுபோக்கு சேனல்களில் ஒன்றான Zee தமிழ் தனது மாறுபட்ட மற்றும் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் மூலம் மக்களின் மனங்களை வென்று வருகிறது. ஒவ்வொரு விசேஷ நாட்களிலும் ரசிகர்களுக்காகச் சிறப்பு நிகழ்ச்சிகளைத் திட்டமிடும் ஜீ தமிழ். இந்த ஆண்டு மே 1 - உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு (Labour Day), பிளாக் Buster திரைப்படங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் ஒரு பிரம்மாண்டமான கொண்டாட்டத்திற்குத் தயாராகியுள்ளது.
இந்த உழைப்பாளர் தினத்தில் ஜீ தமிழ் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சிகளின் விவரங்கள் பின்வருமாறு:இந்தத் திருநாளின் தொடக்கமாக, காலை 8:30 மணிக்கு பிரபல சொற்பொழிவாளர் கலைமாமணி சுகி சிவம் தலைமையில் AI தொழில்நுட்பம் வரமா? சாபமா? என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற உள்ளது. வாழ்வியலோடு தொடர்புடைய கருத்துக்களையும், சுவாரஸ்யமான விவாதங்களையும் முன்வைக்கும் இந்த நிகழ்ச்சி, நேயர்களுக்கு ஒரு சிறந்த அறிவுப்பூர்வமான தொடக்கமாக அமையும்.
May 1 2026 : மே தின சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் படங்கள்
மதிய வேளையை அதிர வைக்க வருகிறார் நந்தமுரி பாலகிருஷ்ணா. ஆம், நந்தமுரி பாலகிருஷ்ணா இரட்டை வேடத்தில் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற பிளாக்பஸ்டர் திரைப்படமான அகண்டா 2 (Akhanda 2), காலை 10:00 மணிக்கு உலகத் தொலைக்காட்சியில் முதல் ஒளிபரப்பாக உங்கள் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிறது. ஊழல் மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு எதிராகப் போராடும் ஒரு நேர்மையான மனிதன் மற்றும் நீதியை நிலைநாட்ட தெய்வீக சக்தியாக உருவெடுக்கும் அகண்டா என அதிரடி ஆக்ஷன் மற்றும் ஆன்மீகம் கலந்த விறுவிறுப்பான கதையாக இத்திரைப்படம் அமையும்.
உலகத் தொலைக்காட்சி முதல் ஒளிபரப்பு: 'சிறை'
மாலை வேளையில் விறுவிறுப்பைக் கூட்ட, விக்ரம் பிரபு நடித்துள்ள சிறை திரைப்படம் மாலை 5:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் விக்ரம் பிரபு காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். ஒரு கைதியை அழைத்துச் செல்லும் பயணத்தில், இக்கட்டான நிலையில் இருக்கும் ஒரு இளம் ஜோடியைச் சந்திக்கும் நாயகன், அதன் பிறகு சந்திக்கும் உணர்ச்சிகரமான சவால்களும், திருப்பங்களுமே இப்படத்தின் கதைக்களம். மனித உறவுகளையும், இக்கட்டான சூழலில் நாம் எடுக்கும் முடிவுகளையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

