Dailyhunt
May Month Rasi Palan 2026: கடகம் ராசிக்கு பதவி உயர்வு, வேலை மாற்றம் சாத்தியம்... ஆனால் இதில் மட்டும் கவனம் தேவை

May Month Rasi Palan 2026: கடகம் ராசிக்கு பதவி உயர்வு, வேலை மாற்றம் சாத்தியம்... ஆனால் இதில் மட்டும் கவனம் தேவை

Kadagam May Matha Rasipalan 2026: கடக ராசிக்காரர்களுக்கு மே மாதம் நிலவும் கிரகங்களின் நிலை பெரும்பாலும் சாதகமாக இருக்கிறது.

ராகு கேது பெயர்ச்சி தவிர, தனிப்பட்ட வாழ்க்கை, வேலை தொழில் உத்தியோகம் குடும்பம் என்று எல்லா விதங்களிலும், சாதகமாக இருக்கிறது. கடகம் ராசிக்காரர்களுக்கு மே மாதம் குடும்பம், திருமண வாழ்க்கை, காதல், வேலை, தொழில், வருமானம் மற்றும் பொதுவாக எந்த விஷயங்களில் என்னவெல்லாம் நடக்கும், எதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் பற்றிய விரிவான மே மாத ராசி பலன் இங்கே.

கடகம் ராசிக்கு மே மாத கிரக நிலைகள் தரும் பலன்கள் - Kadagam May Matha Rasipalan 2026 Planets Effects

  • சூரியன் பெயர்ச்சி - செல்வாக்கு அதிகரிக்கும்
  • புதன் பெயர்ச்சி - பண வரவு, ஆதரவு
  • சுக்கிரன் பெயர்ச்சி - சுப விரயங்கள்
  • குரு பெயர்ச்சி - சுப விரயங்கள்
  • செவ்வாய் பெயர்ச்சி - தொழில் வளர்ச்சி, பதவி உயர்வு,
  • சனி பெயர்ச்சி - அதிர்ஷ்டம், நிலைத்தன்மை
  • ராகு பெயர்ச்சி - உடல் ஆரோக்கியத்தில் கவனம்
  • கேது பெயர்ச்சி - பேச்சில் நிதானம், குடும்பத்தில் நிம்மதியின்மை

பராபவ ஆண்டு கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
கடகம்: மே மாத பொதுப்பலன் | Kadagam May Month Rasi Palan 2026
கடக ராசிக்காரர்களுக்கு மே மாதம் ஒரு சில விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடிய காலமாக இருக்கிறது. குறிப்பாக, உடல் நலம், குடும்பத்தில் சிக்கல் அல்லது வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். இதைத் தவிர்த்து, பிற விஷயங்கள் அனைத்துமே சாதகமாக உள்ளது. குடும்பத்தில் வாக்குவாதங்களோ, சண்டைகளோ வந்தாலும், தனிப்பட்ட விதத்தில் நீங்கள் மகிழ்ச்சியாகவே இருப்பீர்கள். உங்கள் ஆளுமை மேம்படும். பேச்சில் மட்டும் நிதானமும், பொறுமையும் அவசியம். தொழில், வேலை, என்று நினைத்த விஷயங்கள் நடக்கும்.

கடகம் | பணம் மற்றும் பொருளாதாரம் - Kadagam May Month Rasi Palan 2026 Finance, Money, Income
கடகம் ராசிக்காரர்களுக்கு மே மாதம் பொருளாதார ரீதியாக, நல்ல மாதமாக இருக்கும். பண வரவு திருப்தியாக, நிலையாக இருக்கும். ஆனால், குடும்பத்துக்காக செய்யும் செலவுகள் அதிகரிக்கும். பண விஷயத்தில் பட்ஜெட் போட்டு செலவு செய்வது நல்லது.

கடகம் | தொழில் & வேலை - Kadagam May Month Rasi Palan 2026 Career and Job
உத்தியோகம் தொழில் மற்றும் வியாபாரம் சார்ந்த விஷயங்களில் மே மாதம் கடகம் ராசிக்காரர்களுக்கு நல்ல வளர்ச்சி, முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும், புதிய ஒப்பந்தகள் கிடைக்கும். அரசு பணி கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு தொழில் வளர்ச்சி அடையும்.

கடகம் | கவனமாக இருக்க வேண்டியவை
மிதுன ராசிக்காரர்கள் தனக்கு சம்மந்தமில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

மே மாதம் மிதுனம் ராசிக்கு எப்படி இருக்கும்? மாத ராசிபலன் முழு விவரங்கள்
Disclaimer: இந்தப்பதிவு ஆன்மீக மற்றும் ஜோதிட நம்பிக்கைகளின் படிஎழுதப்பட்டதாகும். இதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கு அறிவியல் தொடர்பான விளக்கம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi