Dailyhunt
Minister KR Periyakaruppan: திருப்பத்தூரில் திரில்லர்.. ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் அமைச்சர் பெரியகருப்பனை வீழ்த்திய தவெக வேட்பாளர்!

Minister KR Periyakaruppan: திருப்பத்தூரில் திரில்லர்.. ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் அமைச்சர் பெரியகருப்பனை வீழ்த்திய தவெக வேட்பாளர்!

2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் பலவிதமான ஆச்சரியங்களை கொடுத்துள்ளது. புதிய வரவாக முதல்முறை தேர்தல் களம் கண்ட விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK Party) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

ஆளுங்கட்சியாக இருந்த திமுக 59 இடங்களை மட்டுமே வென்று 2வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக 47 இடங்களை மட்டுமே வென்று 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தோல்வியை தழுவினார். அத்துடன் துரைமுருகன் தொடங்கி 15 திமுக அமைச்சர்கள் தோல்வி அடைந்தனர்.

ஒரே ஒரு வாக்கில் தோல்வி

இதில் முக்கிய ஹைலைட்டாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் போட்டியிட்ட சிட்டிங் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் பெரியகருப்பன்.

இவர் 2006ம் ஆண்டு முதல் சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்து வந்தவர். கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் கூட 30 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், இந்தமுறை திமுக சார்பில் பெரியகருப்பன், அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக கே.சி.திருமாறன், தவெக சார்பில் சீனிவாச சேதுபதி, நாம் தமிழர் கட்சி சார்பில் ரம்யா மோகன் ஆகியோர் வேட்பாளராக களம் கண்டனர். தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஆகியோர் இடையே கடும் இழுபறி தொடர்ந்தது.

: எடப்பாடி பழனிசாமி பெயர் இல்லை.. விஜய்க்கு பிரத்தியேக வாழ்த்து.. தவெகவுக்கு அன்புமணி ராமதாஸ் சிக்னல்?

கடைசியில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி அமைச்சர் பெரியகருப்பனை வீழ்த்தி வெற்றி பெற்றார். அமைச்சர் பெரியகருப்பன் 83,374 வாக்குகள் பெற்ற நிலையில், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகளை பெற்று எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளார். இந்த முடிவானது தேசிய அளவில் கவனம் பெற்று ஒவ்வொரு வாக்கின் வலிமை மற்றும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. திருப்பத்தூர் மட்டுமல்லாது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளையும் தவெக கைப்பற்றியுள்ளது.

தோல்வி அடைந்த அமைச்சர்கள்

இந்த தேர்தலில் தோல்வி அடைந்த திமுக அமைச்சர்களின் விவரம் பின்வருமாறு; காட்பாடி தொகுதியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் , ஈரோடு மேற்கு தொகுதியில் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி, ஆலந்தூர் தொகுதியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சைதாப்பேட்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆவடி தொகுதியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், மன்னார்குடி தொகுதியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தோல்வி அடைந்தனர்.

: சக்தியை மீறி உழைத்தேன்.. சிறந்த எதிர்க்கட்சியாக திமுக செயல்படும்.. மு.க.ஸ்டாலின் பதிவு!

மதுரை மத்தி தொகுதியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை கிழக்கு தொகுதியில் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, ராணிப்பேட்டை தொகுதியில் அமைச்சர் காந்தி, தூத்துக்குடி தொகுதியில் சமூகநலத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், காங்கேயம் தொகுதியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருவெறும்பூர் தொகுதியில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi