Kodai Vizha 2026 in Ooty: கோடை காலத்தில், தமிழ்நாட்டில் உள்ள மலை பிரதேசங்களில் கோடை விழா, மலர்கள் கண்காட்சி நடக்கும்.
சில மாதங்களுக்கு முன்பே, புதுச்சேரியில் வேளாண் திருவிழா மற்றும் மலர் கண்காட்சி சிறப்பாக நடந்தது. கோடை காலம் தொடங்கிய நிலையில், ஊட்டியில் கோடை விழா 2026, தொடங்கியுள்ளது. மே மாதம் 4 அன்று தொடங்கிய இந்தத் திருவிழா மாதம் முழுவதும் நீடிக்கிறது. எந்த நாட்களில் என்னென்ன நிகழ்வு நடக்கிறது, நடக்கும் இடம் உள்ளிட்ட முழு விவரங்கள் உங்கே.
ஊட்டி கோடை விழா
தமிழ்நாட்டில் கோடையில் குளிர்ச்சியாக இருக்கும் ஹில் ஸ்டேஷன்கள் என்று சொன்னாலே, முதல் இரண்டு இடத்தில் இருப்பது ஊட்டி மற்றும் கொடைக்கானல். பொதுவாக ஊட்டி கோடை விழா என்றாலே, மலர் கண்காட்சி, ரோஜாக்கள் கண்காட்சி, ஆயிரக்கணக்கில் பூக்கள் கண்காட்சி ஆகியவை இருக்கும். ஆனால், பூக்கள் மட்டுமல்ல, காய்கறிகள் திருவிழா, வேளாண் விழா, செல்ல பிராணிகள் விழா ஆகியவையும் உள்ளது.
ஊட்டி கோடை விழா தொடக்கம் மற்றும் முடிவு
(Ooty Summer Festival 2026)
- ஊட்டி சம்மர் ஃபெஸ்டிவல் தொடக்கம் - மே 4, 2026
- ஊட்டி சம்மர் ஃபெஸ்டிவல் தொடக்கம் - ஜூன் 1, 2026
Kodai Vizha 2026 in Ooty - முழு நிகழ்வுகளின் பட்டியல்
ஊட்டி கோடை விழா 2026 - நிகழ்வு விவரங்கள்
ஊட்டி கோடை விழா 2026-ன் முக்கிய நிகழ்வுகள் மற்றும் அவற்றின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
1. காய்கறி கண்காட்சி தேதி: மே 3 - மே 4, 2026
இடம்: காந்தி பூங்கா, கோத்தகிரி
சிறப்பம்சங்கள்: புதுமையான முறையில் செதுக்கப்பட்ட காய்கறிகள், புதிய விளைச்சல் காட்சிகள் மற்றும் தனித்துவமான விவசாயக் காட்சிகள் இடம்பெறும்.
2. நறுமணப் பொருட்கள் கண்காட்சி தேதி: மே 9 - மே 11, 2026
இடம்: செயின்ட் தாமஸ் பள்ளி, கூடலூர்
சிறப்பம்சங்கள்: மிளகு, ஏலக்காய், கிராம்பு மற்றும் அப்பகுதியில் பயிரிடப்படும் பிற தோட்டப் பயிர்களின் கண்காட்சி இடம்பெறும்.
3. ரோஜா கண்காட்சி தேதி: மே 10 - மே 12, 2026
இடம்: அரசு ரோஜா தோட்டம், ஊட்டி
சிறப்பம்சங்கள்: ஆயிரக்கணக்கான வகையான ரோஜாக்கள் பூத்துக்குலுங்கும் காட்சிகள் இடம்பெறும்.
4. மலர் கண்காட்சி தேதி: மே 16 - மே 21, 2026
இடம்: அரசு தாவரவியல் பூங்கா, ஊட்டி
சிறப்பம்சங்கள்: இது முழு திருவிழாவின் முக்கிய சிறப்பம்சமான மலர் கண்காட்சியாகும்.
5. பழக் கண்காட்சி தேதி: மே 24 - மே 26, 2026
இடம்: சிம்ஸ் பூங்கா, குன்னூர்
சிறப்பம்சங்கள்: மலைப்பகுதிகளில் விளையும் பல்வேறு பழங்களின் காட்சிகள் இடம்பெறும்.
ஊட்டிக்கு செல்பவர்களுக்கான டிப்ஸ்
ஊட்டியில் நடக்கும் கோடை திருவிழாவின் மிகவும் பிரபலமான நிகழ்வுகளான ரோஜா கண்காட்சி மற்றும் பிரம்மாண்டமான மலர் கண்காட்சி ஆகிய இரண்டையும் கண்டுகளிக்க, மே 10 முதல் மே 21, 2026 வரையிலான நாட்களில், நீங்கள் ஊட்டிக்கு உங்கள் பயணத்தைத் திட்டமிடலாம். ஊட்டியில் இது சுற்றுலாப் பயணிகள் குவியும் காலம் என்பதால், நீங்கள் எப்படி செல்லவிருக்கிறீர்கள், தங்குமிடம் ஆகியவற்றை முன்கூட்டியே முன்பதிவு செய்வது அவசியம்.

